ஆரம்பமே அசத்தல்... 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி!!

 
இந்தியா

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது லீக் போட்டிகள் தொடங்கியுள்ள நிலையில் நேற்று இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் கம்மின்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர் மற்றும் மிட்செல் மார்ஷ் களமிறங்கினர். 

இந்தியா ஆஸ்திரேலியா

இதில் மிட்செல் மார்ஷ் ரன் எடுக்காமல் ஆட்டமிழந்தார். டேவிட் வார்னர் 41 ரன்களில் வெளியேறினார். அடுத்து களமிறங்கிய ஸ்டீவ் ஸ்மித் 46 ரன்களில் ஜடேஜா பந்துவீச்சில் போல்ட் ஆனார். மார்ன்ஸ் லபுஷேன் 27 ரன்களிலும், மேக்ஸ்வெல் 15 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்த நிலையில் ஆஸ்திரேலிய அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 199 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் தரப்பில் ஜடேஜா 3 விக்கெட்டுகளும், பும்ரா மற்றும் குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டுகளும், சிராஜ், ஹர்திக் பாண்டியா மற்றும் அஸ்வின் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
 
இதையடுத்து 200 ரன் என்ற இலக்கை நோக்கி பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மாவும், இஷான் கிஷனும் ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்து வெளியேறினர். ஸ்டார்க் வீசிய முதல் ஓவரில் இஷான் கிஷன்  ரன் எதுவும் எடுக்காமலேயே ஆட்டமிழந்தார். ஹேசில்வுட் வீசிய 2வது ஓவரில் ரோகித் சர்மா (0) எல்.பி.டபில்யூ. முறையில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் (0) அதே ஓவரில் ஆட்டமிழந்து வெளியேறினார். தொடக்கத்திலேயே 3 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறியது. 

இந்தியா ஆஸ்திரேலியா
இதையடுத்து 4வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த விராட் கோலி - கே.எல்.ராகுல் ஜோடி இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டது. நிதானமாக விளையாடிய இந்த ஜோடியின் பொறுப்பான ஆட்டத்தால் இந்திய அணி 26 ஓவர்களில் 100 ரன்களை எட்டியது. தொடந்து விராட் கோலி மற்றும் கே.எல் ராகுல் இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர்.  
இதையடுத்து விராட் கோலி 85 ரன்களில் அவுட் ஆன நிலையில், கே.எல்.ராகுல் 97 ரன்கள் விளாசி இறுதி வரை அவுட் ஆகாமல் களத்தில் நின்றார். இறுதியில் இந்திய அணி 41.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web