அடி தூள்... முதல் போட்டியிலேயே இந்தியா தங்கம் வென்று சாதனை!!

 
இந்திய மகளிர் அணி

சீனாவில் 19வது ஆசிய விளையாட்டு போட்டிகள் செப்டம்பர் 23ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.  இந்தியா தொடர்ந்து பதக்கங்களை குவித்து வருகிறது. குறிப்பாக, ஆசிய விளையாட்டு தொடரின் கிரிக்கெட் போட்டிகளில் முதன்முதலாக இந்தியாவும் விளையாடி வருகிறது.  மகளிர் கிரிக்கெட்டின் இறுதிப்போட்டி இன்று செப்டம்பர்  25ம் தேதி நடைபெற்றது. இந்த இறுதிப்போட்டியில் இந்தியாவுடன் இலங்கை அணி மோதியது டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. 

இந்திய மகளிர் அணி
அதிகபட்சமாக ஸ்மிருதி மந்தனா 46 ரன்களையும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 42 ரன்களையும் எடுத்தனர். ஆனால், மற்ற வீராங்கனைகள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு இந்தியா 116 ரன்களை குவித்தது. பிரபோதனி, சுகந்திகா குமாரி, இனோகா ரணவீர்   இலங்கை பந்துவீச்சாளர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.  

இந்திய மகளிர் அணி


அடுத்து ஆடத்தொடங்கிய இலங்கை மகளிர் அணி தொடக்கமே ஊற்றி மூடிக் கொண்டது.   நட்சத்திர வீரர் சமாரி அட்டப்பட்டு  உட்பட  நட்சத்திர ஆட்டக்காரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.  இலங்கை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 97 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.   குறிப்பாக, இந்திய பந்துவீச்சில் டிடாஸ் சாது 3, ராஜேஸ்வரி கெயக்வாட் 2, தேவிகா வைத்யா, தீப்தி சர்மா, பூஜா வத்ஸர்கர் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.   பங்கேற்ற முதல் ஆசிய விளையாட்டு தொடரிலேயே தங்கம் பதக்கம் வென்று இந்திய மகளிர் அணி சாதனை படைத்துள்ளது. இதற்கு இந்தியா முழுவதும் இருந்து வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன. 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web