இந்தியா அபார வெற்றி!! 228 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய சாதனை!!

 
விராட் கோஹ்லி

நிர்ணயிக்கப்பட்ட  50 ஓவர்களில்    இந்தியா 2 விக்கெட் இழப்புக்கு 356 ரன்கள் குவித்தது.  விராட்கோஹ்லி 122 ரன்களுடனும்  , லோகேஷ் ராகுல் 111 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். கடைசி 10 ஓவர்களில் மட்டும் 105 ரன்கள் விளாசி அமர்க்களப்படுத்தினர்.  357 ரன்கள் சேர்த்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி பாகிஸ்தான் அணியில் அடுத்தடுத்து  விக்கெட்கள் இழந்தன.

விராட் கோஹ்லி

ஆட்டம் தொடங்கிய போது குல்தீப் யாதவ்  பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் பாகிஸ்தான் விக்கெட்டுகள் மளமளவென விழுந்தன.  பஹர் ஜமான் 27 ரன்னும், இப்திகர் அகமது, ஆஹா சல்மான் தலா 23 ரன்னும் எடுத்தனர். 32 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்தன.  பாகிஸ்தான் 128 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியது.

இந்தியா பாகிஸ்தான்

 இதன் மூலம் இந்தியா 228 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை பெற்றது. பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா 200 ரன்னுக்கு மேல் வித்தியாசத்தில் வெற்றி காண்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. சூப்பர்4 சுற்றில் முதல் வெற்றியை பெற்றுள்ள இந்தியா அடுத்து இலங்கையுடன் இன்று  மோத உள்ளது . அதே நேரத்தில் பாகிஸ்தான்  கடைசி லீக் ஆட்டத்தில்  இலங்கையை வீழ்த்தினால் தான்  இறுதிப்போட்டிக்கு செல்லவே முடியும்.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web