9 ஓவரில் இந்தியா அபார வெற்றி பெற்று வெள்ளிப்பதக்கம்!!

 
இந்தியா

4 ஆண்டுகளுக்கு ஒரு முறை  ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் தற்போது 19வது  ஆசிய விளையாட்டுப் போட்டிகள்  சீனாவில் தொடங்கி நடைபெற்று வருகிறது.இதுவரை நடந்த  18 ஆசிய விளையாட்டு போட்டிகளில் கிரிக்கெட் இடம்பெறாத நிலையில், இந்த தொடரில் கிரிக்கெட் போட்டியும் சேர்க்கப்பட்டுள்ளது.
 ருத்ராஜ் தலைமையிலான இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி வங்கதேச அணிக்கு எதிராக அரை இறுதிப் போட்டியில் விளையாடியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை எதிர்கொண்டு விளையாட முடியாமல் வங்கதேச அணி பேட்ஸ்மேன்கள் பரிதாபமாக சுருண்டார்கள்.

இந்தியா
 
வங்கதேச அணியின் பர்வேஸ் ஹூசைன் 23, ஜேக்கர் அலி 24 இருவர் மட்டுமே 20 ரன்கள் தாண்டி எடுத்தனர். 20 ஓவர்கள் முடிவில் வங்கதேச அணி 9 விக்கெட் இழப்புக்கு 96 ரன்கள் மட்டும் எடுத்தது. வங்கதேச அணியில் ஏழு பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்கத்தில் ஆட்டம் இழந்தார்கள். இந்திய அணியின் தரப்பில் சாய் கிஷோர் 3 விக்கெட் கைப்பற்றினார். வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட் கைப்பற்றினார். மேலும் அர்ஸ்தீப் சிங், திலக் வர்மா, ரவி பிஸ்னோய், ஷாபாஷ் அகமத் ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினார்கள்.

இந்தியா

97 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி  விரைவில் வெற்றி பெற்றது.  கடந்த முறை சதம் அடித்த துவக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் இந்த முறை ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார். பின்னர் வந்த திலக் வர்மா அதிரடியாக விளையாடி 26 பந்துகளில் 2 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர்கள் உடன் 56 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் நின்றார். இவருக்கு துணையாக கேப்டன் ருதுராஜ் 26 பந்துகளில் 4பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் உடன் 40 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் களத்தில் நின்றார். 
இந்திய அணி 9.2 ஓவர்களில் 97 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இறுதிப் போட்டியில் இந்திய அணி ஆப்கானிஸ்தான் அல்லது  கிஸ்தான் அணியை எதிர்கொள்ளும்   என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web