ஒன்றரை மாச கைக்குழந்தையுடன் பணிக்கு வந்த இந்தியாவின் இளம் மேயர்...!!

 
ஆர்யா ராஜேந்திரன்

திருவனந்தபுரம் மேயர் ஆர்யா ராஜேந்திரன், தனது ஒன்றரை மாத கைக்குழந்தையுடன் பணிபுரிந்து வரும்  புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இந்தியாவின் இளம் மேயராக ஆர்யா ராஜேந்திரன். இவருக்கு வயது 24. இவர் 2020ம் ஆண்டு   தனது 21வது வயதில் இந்தியாவின்  இளம் மேயராகப் பதவியேற்றுக்கொண்டார்.  இவர் சிபிஐ எம்எல்ஏவான சச்சின் தேவை  2022ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.  ஆர்யா ராஜேந்திரனுக்கு   கடந்த மாதம் பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் ஆர்யா ராஜேந்திரன், திருவனந்தபுரம் மாநகராட்சி அலுவலகத்தில் கைக்குழந்தையுடன் பணிபுரியும்  புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  

ஆர்யா ராஜேந்திரன்


கைக்குழந்தை தூங்கிக் கொண்டிருக்க, ஆர்யா கோப்புகளை பார்த்து கையொப்பம் இடுகிறார். இந்த  புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  தாய்மை என்பது ஒரு பெண்ணின் தொழில் மற்றும் லட்சியங்களுக்கு இடையூறாக இருக்காது என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில் சிலர் விமர்சனமும் செய்து வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web