இந்திய வீராங்கனை ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள தகுதி பெற்று சாதனை!!

 
பாருல் சௌத்ரி

19-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடைபெற்று முடிந்துள்ளன. இந்தப் போட்டியில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 88.17 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.  இதனைத் தொடர்நது மகளிருக்கான 3000 மீட்டர் மகளிர் ஸ்டீப்பிள் சேஸ் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது.

நீரவ் சோப்ரா

இதில் இந்தியாவின் பாருல் சவுத்ரி பந்தய தூரத்தை 9.15 நிமிடம் 31 நொடிகளில் கடந்து 11வது இடத்தில் இருந்து வருகிறார்.  அவர் 11வது இடம் பிடித்தாலும் இது புதிய தேசிய சாதனை மட்டுமின்றி, அடுத்த ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக் தொடருக்கு தகுதி பெற்றவராகவும் அறிவிக்கப்பட்டுள்ளார்.

பாருல் சௌத்ரி

ஒலிம்பிக் தொடரில்  கலந்து கொள்ள  தேவையான 9.23 நிமிடத்திற்குள் பந்தய தூரத்தையும் கடந்திருப்பது தேசிய சாதனையாக அறிவிக்கப்பட்டுள்ளது  இந்த சாம்பியன்ஷிப்பில் ஆடவர் 4*400 தொடர் ஓட்டத்தில் இந்தியா 5ம் இடத்தை  பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web