அமெரிக்காவில் இந்திய தொழிலதிபர் மீது ரூ.44 ஆயிரம் கோடி மோசடி குற்றச்சாட்டு!

 
தொழிலதிபர் அமெரிக்கா

அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளி தொழில் அதிபர் பங்கிம் பிரம்மபட் மீது, உலகப் பிரசித்தி பெற்ற முதலீட்டு நிறுவனம் பிளாக்ராக் ரூ.44 ஆயிரம் கோடி மதிப்பிலான கடன் மோசடி செய்ததாக புகார் அளித்துள்ளது.

அமெரிக்காவை தளமாகக் கொண்ட பிராட்பேண்ட் டெலிகாம் மற்றும் பிரிட்ஜ்வாய்ஸ் என்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களின் உரிமையாளராக பங்கிம் பிரம்மபட் செயல்பட்டு வந்தார். இவர் பல்வேறு முதலீட்டு நிறுவனங்களிடமிருந்து பெருமளவு கடன்கள் பெற்றிருந்ததாக கூறப்படுகிறது.

அமெரிக்கா

இந்நிலையில், பிளாக்ராக் நிறுவனத்தின் தனியார் கடன் பிரிவான HBS இன்வெஸ்ட்மென்ட் பார்ட்னர்ஸ் மற்றும் பிற அமெரிக்க கடன் நிறுவனங்களிடம், பங்கிம் பிரம்மபட் போலியான வாடிக்கையாளர் கணக்குகள், ஆவணங்கள் உருவாக்கி சுமார் 500 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ.44 ஆயிரம் கோடி) மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும், மோசடி வழியாக பெற்ற பணத்தை இந்தியா மற்றும் மொரீஷியஸுக்கு மாற்றியதாகவும் பிளாக்ராக் புகாரில் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்கா

அமெரிக்க விசாரணை அமைப்புகள் இந்த வழக்கை தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றன. பங்கிம் பிரம்மபட் மீது விரைவில் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?