வைரல் வீடியோ... அமெரிக்க வீரரை தட்டி தூக்கிய இந்திய செஸ் வீரர் குகேஷ்!

 
குகேஷ்

அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் நடைபெறும் கிளட்ச் செஸ் போட்டியில், இந்திய சதுரங்க வீரர் குகேஷ் அதிரடியான வெற்றி பெற்றுள்ளார். ரேபிட் முறையில் நடைபெறும் இந்த போட்டியில் உலக தரவரிசையில் முன்னணியில் உள்ள மாக்னஸ் கார்ல்சென் (நார்வே), ஹிகாரு நகமுரா, பாபியானோ கருனா (இருவரும் அமெரிக்கா) மற்றும் உலக சாம்பியனான குகேஷ் (இந்தியா) பங்கேற்றுள்ளனர்.

தொடக்க நாளில் நடைபெற்ற ஆட்டத்தில், குகேஷ் கருப்பு காய்களுடன் ஹிகாரு நகமுராவை எதிர்கொண்டார். 46-வது நகர்த்தலில் துல்லியமான தாக்குதலுடன் நகமுராவை தோற்கடித்து வெற்றியை கைப்பற்றினார். சமீபத்தில் நடைபெற்ற இந்தியா–அமெரிக்கா காட்சி போட்டியில் நகமுரா குகேசை வீழ்த்தி, அதனை ஆக்ரோஷமாக கொண்டாடியிருந்தார்.

அதற்குப் பழிதீர்க்கும் விதமாக இம்முறை அமைதியாகவும் நிதானமாகவும் ஆட்டத்தை முடித்து வெற்றியை கொண்டாடிய குகேஷ், ரசிகர்களின் பாராட்டை பெற்றுள்ளார். குகேஷின் இந்த வெற்றி, கிளட்ச் செஸ் தொடரில் இந்திய அணிக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!