7,000 கோடி மதிப்பில் போதைப் பொருள் கடத்தல்.. இந்திய தம்பதியினருக்கு 33 ஆண்டுகளுக்கு சிறை தண்டனை..!

 
கவல்ஜிட்சின்வா ராய்ஜாடா - ஆர்த்தி தீர்

 இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தம்பதிகள் ஆர்த்தி திர் (வயது 59) மற்றும் அவரது கணவர் கவல்ஜிட்சின்வா ராய்ஜாடா (வயது 35). இங்கிலாந்தின் லண்டனில் உள்ள ஹன்வெல் பகுதியைச் சேர்ந்தவர்கள் 2019 முதல் 2021 வரை ஆஸ்திரேலியாவுக்கு ரூ.7,393 கோடி மதிப்புள்ள கோகோயின் ஏற்றுமதி செய்துள்ளனர். இதுதவிர இருவரும் கடந்த 2017ல் குஜராத்தில் இரட்டைக் கொலைகளை செய்தனர்.

British-Indian Couple Jailed For 33 Years After Cocaine Export; Already  Charged With Murder Of Adopted Son In Gujarat

இத்தம்பதியின் வளர்ப்பு மகன் கோபால் செஜானி(11) 2017ல் குஜராத்தில் கடத்தப்பட்டார்.இவரை காப்பாற்ற சென்ற உறவினர் வரசுக் கர்தானி கடுமையாக தாக்கப்பட்டு கொல்லப்பட்டார். அவர்கள் கோபாலை லண்டனுக்கு அழைத்துச் செல்ல விரும்பினர், அவரை தத்தெடுத்து சென்று குஜராத்தில் கொன்றனர். இன்சூரன்ஸ் பணத்தை வசூலிப்பதற்காக வளர்ப்பு மகனைக் கொல்ல திட்டமிட்டது விசாரணையில் தெரியவந்தது.

இந்த நிலையில் அவர்கள் மீது கொலை சதி மற்றும் கடத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.கோபால் செஜானியின் ரூ.1.58 கோடி இன்சூரன்ஸ் பணத்திற்காக இந்தக் கொலைகள் நடந்துள்ளன. இருப்பினும், தம்பதியினர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவதில் இருந்து தப்பினர். அதன்படி, குஜராத்தில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டால் அது மனித உரிமை மீறலாகும் என இங்கிலாந்து நீதிமன்றத்தில் கூறி தப்பினர்.

Indian-origin couple jailed in UK for 33 years wanted for Gujarat murder;  exported cocaine to Australia - India Today

தொடர்ந்து நடந்த சோதனையில், 514 கிலோ (0.6 டன்) கொக்கைன் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் சர்வதேச மதிப்பு ரூ.600 கோடி. இதனுடன், உலோகப் பெட்டிகளில் மறைத்து, வணிக விமானங்களில், 7 டன் எடையுள்ள போதைப் பொருட்களை, உலகம் முழுவதும் கடத்திய அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகின.

அவர்கள் வார்ட்ரோ விமான நிலையத்தில் வேலை செய்கிறார்கள். அதன் அடிப்படையில் அவர்கள் இந்த போதை பொருள் கடத்தல் தொழிலில் ஈடுபட்டிருக்கலாம் என என்.சி.ஏ. வைத்த இந்த குற்றச்சாட்டுகளை அவர்கள் மறுத்தாலும், நேற்று விசாரணையின் முடிவில் அவர்கள் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டனர். இதன் விளைவாக, நீதிபதி எட்வர்ட் கானல் அவர்கள் இருவருக்கும் 33 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தார்.

 தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க


 

From around the web