இந்திய கிரிக்கெட் வீரர் மயங்க் அகர்வால் ஐசியுவில் அனுமதி... ரசிகர்கள் அதிர்ச்சி!

 
மயங்க் அகர்வா

இந்திய கிரிக்கெட் அணியின் துவக்க வீரர் மயங்க் அகர்வால், திடீர் உடல்நலக்குறைவு காரணமாக அகர்தலாவில் தனியார் மருத்துவமனை ஒன்றின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளது இந்திய கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. 

இந்திய அணிக்காகப் பல போட்டிகளில் விளையாடியிருக்கும் மயங்க் அகர்வால், தற்போது கர்நாடகா அணிக்காக ரஞ்சி போட்டிகளில் விளையாடி வருகிறார். கர்நாடகா அணியின் கேப்டனான மயங்க் அகர்வால் திரிபுரா மாநிலத்தில் ரஞ்சி ட்ராபி தொடரில் பங்கேற்று விட்டு, அடுத்த போட்டியில் பங்கேற்பதற்காக அகர்தலாவில் இருந்து சூரத் செல்ல சக வீரர்களுடன் விமானம் ஏறி இருக்கிறார்.  விமானப் பயணத்தின் போது மயங்க் அகர்வால் உடல்ரீதியாக அசௌகரியமாக உணரப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவரின் வாய் மற்றும் தொண்டை பகுதிகளில் எரிச்சல் உணர்வு ஏற்பட்டிருக்கிறது.

இதனைத் தொடர்ந்து உடனடியாக விமானம் கிளம்பிய இடத்துக்கே திருப்பப்பட்டு அகர்தலா வந்து சேர்ந்தது. விமான நிலையத்திலிருந்து மயங்க் அகர்வால் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார். மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. அவருக்கு எந்த விதமான அபாயமும் இல்லை என மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மயங்க் அகர்வால்

மயங்க் அகர்வால் விமானத்தில் அருந்திய பானம்தான் அவருக்கு ஒத்துக்கொள்ளவில்லை என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன. இண்டிகோ விமான நிறுவனம் தரப்பில் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், "6E 5177 இண்டிகோ விமானம் அகர்தலாவிலிருந்து டெல்லிக்குச் சென்று கொண்டிருந்தது. மருத்துவ அவசரம் காரணமாக விமானம் அகர்தலாவுக்கே திருப்பப்பட்டு அந்தப் பயணி விரைவாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மற்ற பயணிகளுடன் விமானம் 16:20 மணிக்கு டெல்லிக்குப் புறப்பட்டு சென்றது" எனக் கூறப்பட்டிருக்கிறது.

இந்த விமான பயணத்தின் போது மயங்க் அகர்வாலுக்கு குடிநீருக்கு பதிலாக வேறு ஒரு பாட்டிலை மாற்றி கொடுத்து இருக்கிறார் விமான ஊழியர் ஒருவர் என சொல்லப்படுகிறது. ஆனால், அந்த பாட்டிலில் ஆசிட் அல்லது உடலுக்கு பாதகம் விளைவிக்கும் கடுமையான வேதிப் பொருள் இருந்ததாக கூறப்படுகிறது.

மயங்க் அகர்வால்

அதை ஒரு மடக்கு குடித்த உடன் வாயின் உட்பகுதி எரிந்ததால் மயங்க் அகர்வால் அதை துப்பினார். எனினும், அவர் அதன் பின் வலியில் துடித்து மயக்க நிலைக்கு சென்றதால் உடனடியாக விமானத்தில் இருந்து இறக்கப்பட்டு, மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு இருக்கிறார். அங்கே அவருக்கு ஐசியூவில் வைத்து சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிக்கைகள் எதுவும் வெளியாகவில்லை.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web