இந்திய குச்சிப்புடி நடனக் கலைஞர் அருணிமா குமாருக்கு பிரிட்டிஷ் எம்பயர் பதக்கம்!
டெல்லியை சேர்ந்த அருணிமா குமார் (47) இந்தியாவின் பாரம்பரிய நடன வடிவமான குச்சிப்புடி கலைஞராக உலகளவில் புகழ்பெற்றவர். 2008ஆம் ஆண்டு சங்கீத நாடக அகாடமி வழங்கும் யுவ புராஸ்கர் விருதைப் பெற்ற அவர், தற்போது இங்கிலாந்தில் வசித்து வருகிறார்.

இந்திய கலாசாரம் மற்றும் கலை மரபுகளை வெளிநாடுகளில் பரப்பி மேம்படுத்தும் பணிக்காக அருணிமா குமாரின் பெயர், இங்கிலாந்தின் மிக உயரிய கலைவிருதான பிரிட்டிஷ் எம்பயர் பதக்கத்திற்காக பரிந்துரைக்கப்பட்டது. மன்னர் சார்லஸ் இதனை அங்கீகரித்து, அவருக்கு அந்த உயரிய விருதை வழங்கினார்.

இதன்மூலம், பிரிட்டிஷ் எம்பயர் பதக்கம் பெற்ற முதல் குச்சிப்புடி நடனக் கலைஞர் என்ற பெருமையை அருணிமா குமார் பெற்றுள்ளார். அவரின் சாதனை, இந்திய கலாசாரத்தின் பெருமையை சர்வதேச அளவில் மீண்டும் ஒலிக்கச் செய்துள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
