மீண்டும் ஓர் கொடூர கொலை.. அமெரிக்காவில் தொடர்ந்து மரணிக்கும் இந்திய வம்சாவளிகள் ..!

 
விவேக் சந்தர் தனேஜா

அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள உணவகத்திற்கு வெளியே இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். காவல்துறையின் கூற்றுப்படி, இந்த கொடூர சம்பவம் பிப்ரவரி 2 ஆம் தேதி அதிகாலை 2 மணிக்கு (அமெரிக்க உள்ளூர் நேரம்) நடந்தது.அடித்துக் கொல்லப்பட்டவர் வெர்ஜினியாவில் உள்ள நிறுவனத்தில் நிர்வாகியாக பணியாற்றி வந்த விவேக் சந்தர் தனேஜா (41) என்பது தெரியவந்துள்ளது.

Vivek Taneja: Indian-origin executive dies after assault | Washington  street incident | - Times of India

தாக்கப்பட்டது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் காயமடைந்த தனேஜாவைக் கண்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.ஆனால், சிகிச்சை பலனின்றி விவேக் பிப்ரவரி 7ஆம் தேதி உயிரிழந்தார். விவேக் சந்தர் தனேஜாவின் மரணத்தை கொலை என்று போலீசார் பதிவு செய்துள்ளனர்.இது தொடர்பாக யாரும் கைது செய்யப்படாத நிலையில், தாக்குதலில் ஈடுபட்ட நபர் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

Indian-origin man dies days after being assaulted outside Washington eatery  - Hindustan Times
இதற்கிடையில், கொலையாளியைக் கண்டுபிடிக்க வாஷிங்டன் பெருநகர காவல் துறை பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது. கொலம்பியா மாவட்டத்தில் நடந்த கொலைகளுக்கு காரணமான நபர் அல்லது நபர்களை கைது செய்ய  உதவி செய்யும் நபர்களுக்கு 25,000 டாலர் (இந்திய மதிப்பில் 2075369.10) வரை பரிசு வழங்கப்படும் என காவல்துறை அறிவித்துள்ளது. இந்த வருடத்தில் மட்டுமே 6 இந்திய வம்சாவளிகள் கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web