சுக்கு நூறாய் நொறுங்கிய கார்... 'பார்முலா-2' கார் ரேஸில் நூலிழையில் உயிர் தப்பிய இந்திய வீரர்!

 
மெய்னி
 'பார்முலா-2' கார் பந்தயத்தில் கலந்து கொண்ட இந்திய வீரர் குஷ் மெய்னி, விபத்தில் நூலிழையில் உயிர் தப்பினார். 

அஜர்பைஜான் தலைநகர் பாகுவில் நடைபெற்ற 'பார்முலா-2' கார் பந்தயத்தில் 'இன்வெக்டா ரேசிங்' அணி சார்பில் இந்திய வீரர் குஷ் மெய்னி 23, பங்கேற்றார். 

பார்முலா -2 பந்தயம் துவங்கிய சில வினாடிகளிலேயே மெய்னியின் ஓட்டிச் சென்ற கார் இன்ஜின் திடீரென நின்றது. இதன் காரணமாக அவரது காருக்குப் பின்னால் வந்த கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்திற்குள்ளானது. இதில் மெய்னியின் கார் சுக்கு நுாறாய் நொறுங்கியது. இருப்பினும் மெய்னி உள்ளிட்ட மற்ற வீரர்களுக்கு பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

விபத்து குறித்து இந்திய வீரர் மெய்னியின் தந்தை கவுதம் கூறுகையில், ''மெய்னிக்கு முறைப்படி அனைத்து மருத்துவ பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன. அவருக்கு எவ்வித பிரச்சனையும் இல்லை. நலமாக உள்ளார்''என்றார்.

மெய்னி

இந்த விபத்து குறித்த விசாரணையில் குஷ் மெய்னியின் தவறு தான் விபத்துக்கு காரணம் என கண்டறியப்பட்டது. 'இன்ஜின் ஸ்டார்ட்' செய்யும் விதிமுறையை அவர் பின்பற்றாததால், அவரே விபத்துக்கு முழு பொறுப்பு என விசாரணைக்குப் பின்னர் உறுதி செய்யப்பட்ட நிலையில், அவருக்கு இந்த விபத்திற்காக அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை