உலக பாரா தடகளம் ஈட்டி எறிதலில் தங்கம் வென்றார் இந்திய வீரர் ரிங்கு ஹூடா!
உலக பாரா தடகள போட்டியில், ஈட்டி எறிதலில் இந்திய வீரர் ரிங்கு ஹூடா தங்கம் வென்று சாதனைப் படைத்துள்ளார். கடந்த 2016ம் ஆண்டு நடந்த ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்று 54.39 மீட்டர் தொலைவு ஈட்டி எறிந்து ரிங்கு ஹூடா 5வது இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

மாற்றுத் திறனாளிகளுக்கான 12வது உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் (எப்.46 பிரிவு) போட்டியில் இந்திய வீரர் ரிங்கு ஹூடா (26) கலந்து கொண்டார். ரிங்கு ஹூடா, 66.37 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து தங்க பதக்கம் வென்றார்.
நடப்பு தொடரில் இந்தியா வென்ற 2வது தங்கப்பதக்கம் இதுவாகும். மற்றொரு இந்திய வீரர் சுந்தர் சிங் குர்ஜார் வெள்ளிப்பதக்கமும் (64.76 மீட்டர்), கியூபா வீரர் குல்லெர்மோ வரோனா கொன்சாலெஸ் (63.34 மீட்டர்) வெண்கலப்பதக்கமும் வென்றனர்.

தனது 3 வயதில் விபத்து ஒன்றில் ரிங்கு ஹூடா, தனது இடது பக்க கையில் பாதிப்பு ஏற்பட்ட போதும், மனவுறுதியுடன் தொடர்ந்து பயிற்சி பெற்று சாதனையாளராக உருவாகி உள்ளார். சிறு வயதில் பள்ளி அளவில் ஓட்ட பந்தய போட்டிகளில் பங்கேற்று வந்த ரிங்கு, கடந்த 2013ம் ஆண்டு ஜனவரி முதல் ஈட்டி எறிதல் பயிற்சியை பெற தாடங்கினார். 2016ம் ஆண்டு நடந்த ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்று 54.39 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி எறிந்து 5-வது இடம் பெற்றார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
