சிறையில் சிக்கன் சாப்பிட்ட கைதிகளுக்கு திடீர் உடல் நலக்குறைவு.. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!
புதுக்கோட்டை மாவட்ட கிளை சிறையில் 450க்கும் மேற்பட்ட தடுப்புக் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு நேற்று (திங்கட்கிழமை) மதியம் வழங்கப்பட்ட கோழிக்கறி உணவை சாப்பிட்ட பின்னர் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. விசாரணைக் கைதிகள் தஞ்சாவூரைச் சேர்ந்த செங்கோல்சேசு (42), அறந்தாங்கியைச் சேர்ந்த உலகநாதன் (55), பட்டுக்கோட்டையைச் சேர்ந்த ராமு (44), தஞ்சாவூரைச் சேர்ந்த நேரு (57), ஆலங்குடியைச் சேர்ந்த சுப்ரமணி (58), ஒரத்தநாட்டைச் சேர்ந்த செல்வம் (31), மாமேல்குடியைச் சேர்ந்த அஜித்குமார் (28). ஆகிய 7 பேருக்கும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது.
இதையடுத்து, சிறையில் முதலுதவி சிகிச்சை அளித்தும் வயிற்றுப்போக்கு பிரச்னை குணமாகாததால், 7 பேரும் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனால் மருத்துவமனையின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
கைதிகளுக்கு உணவு ஒவ்வாமை காரணமாக வயிற்றுப்போக்கு ஏற்பட்டதாக சிறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் நிலையில் சிறையில் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு மற்ற கைதிகளுக்கு மருத்துவ பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!