இன்ஸ்டாவால் விபரீதம்... 50 சவரன் நகை கொடுத்தால் தான் திருமணம்... ஏமாற்றிய காதலனை போலீசில் ஒப்படைத்த காதலி!

 
இன்ஸ்டாவால் விபரீதம்... 50 சவரன் நகை கொடுத்தால் தான் திருமணம்... ஏமாற்றிய காதலனை போலீசில் ஒப்படைத்த காதலி! 

 

சென்னை முகப்பேர் பகுதியில் வசித்து வரும் இளம்பெண் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் பரபரப்பு புகார் அளித்தார். இந்தப் புகாரில் அதில் கூறியிருப்பதாவது: முகப்பேர் பகுதியில் உள்ள தனியார் கம்பனியில் வேலை செய்து வருகிறேன். கடந்த ஒன்றை வருடத்திற்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலம் முகப்பேர் பகுதியை சேர்ந்த ஆதித்யனுடன் நட்பு ஏற்பட்டது. 

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்

நாளடைவில் காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறியதும் காதலிக்க ஆரம்பித்தேன். இதையடுத்து திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி பல இடங்களுக்கு என்னை அழைத்து சென்று ஜாலியாக இருந்தார். இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ளலாம் என உறுதி அளித்தார். இதையடுத்து அவரது பெற்றோர், 50 சவரன் நகை கொடுத்தால் திருமணம் செய்து வைப்பதாக தெரிவித்தனர். 50 சவரன் எங்களால் போடமுடியாது என கூறிவிட்டோம். 

பள்ளி மாணவி தற்கொலை!! கல்லூரி மாணவர் கைது.!!

ஆதித்யனின் பெற்றோர், 'என் மகன் உன்னை திருமணம் செய்து கொள்ளமாட்டான். உன்னால் என்ன செய்ய முடியமோ செய்துகொள் என மிரட்டல் விடுக்கின்றனர். எனவே, என்னை ஏமாற்றிய ஆதித்யன் மற்றும் அவரது பெற்றோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என புகாரில் கூறியுள்ளார். இதன் பேரில் ஆதித்யனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?