கரூர்.... தவெக மாவட்ட செயலரிடம் தீவிர விசாரணை!

 
கரூர்

கரூர் மாவட்டம் பரப்புரையில் செப்டம்பர் 27 அன்று நடைபெற்ற த.வெ.க தலைவர் விஜய்யின் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது, மாநிலத்தைச் சோகத்தில் ஆழ்த்தியது. இந்த சம்பவம் தொடர்பான விசாரணையை மேற்கொள்ள சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) அமைக்கப்பட்டது. இந்த குழு தற்போது விசாரணையை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

கரூர் விஜய்

இதன் ஒரு பகுதியாக, சேலம் மத்திய மாவட்ட தவெக செயலாளர் பார்த்திபன் SIT அலுவலகத்தில் ஆஜராகி, நிகழ்ச்சியின் ஏற்பாடுகள், பாதுகாப்பு, கூட்ட நிர்வாகம் உள்ளிட்ட விவரங்களை விளக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரிடம், சம்பவம் நடந்த தருணத்தில் அவரது பங்கு, கட்சி நடவடிக்கைகளில் அவர் வகித்த நிலை ஆகியவற்றைப் பற்றியும் கேள்விகள் எழுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.

கரூர் விஜய்

மேலும், பிரசார கூட்டத்திற்கு சவுண்ட் சிஸ்டம் அமைத்த தொழில்நுட்ப நிபுணர்களும் விசாரணைக்கு அழைக்கப்பட்டனர். கூட்ட நேரத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒலி வசதிகள், அவை கூட்ட நெரிசலை தூண்டியதா என்பதை SIT தீவிரமாக ஆராய்கிறது. இந்த விசாரணை மூலம், சம்பவத்திற்கு வழிவகுத்த தொழில்நுட்ப காரணங்கள் மற்றும் நிர்வாக தவறுகள் பற்றிய தெளிவான தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?