சிரஞ்சீவியின் பெயர் மற்றும் புகைப்படம் வர்த்தக ரீதியாகப் பயன்படுத்த இடைக்காலத் தடை!
தெலுங்கு திரையுலக சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் பெயர், புகைப்படம் மற்றும் குரல் ஆகியவற்றை அனுமதியின்றி வர்த்தக ரீதியாகப் பயன்படுத்தி வரும் இணையதளங்கள், டிஜிட்டல் ஊடகங்கள் மற்றும் யூடியூப் சேனல்கள் ஆகியவற்றிற்கு ஹைதராபாத் நகர நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

சிரஞ்சீவி, தனது அடையாளங்களை அனுமதியின்றி பயன்படுத்துவது தன்னுடைய புகழுக்கும் சமூக நற்பெயருக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதாகக் கூறி, நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதனைத் தொடர்ந்து, நீதிபதி சிரஞ்சீவியின் பெயர், புகைப்படம் மற்றும் குரல் ஆகியவற்றை எந்த அமைப்பும் வர்த்தக ரீதியாகப் பயன்படுத்தக் கூடாது என உத்தரவிட்டார்.

இதற்கு முன்பும், ரஜினிகாந்த், அமிதாப் பச்சான், அக்சய் குமார், ஹிருத்திக் ரோஷன், நாகர்ஜூனா உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் தங்களது அடையாளங்களை அனுமதியின்றி பயன்படுத்தி வரும் அமைப்புகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்துள்ளனர்.இந்த உத்தரவு, திரைப் பிரபலங்களின் அடையாளங்களை அனுமதியின்றி பயன்படுத்தும் அமைப்புகளுக்கு ஒரு எச்சரிக்கையாகும்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
