2,216 பணியிடங்களுக்கான நேர்காணல்.. 25,000க்கும் மேற்பட்டோர் குவிந்ததால் அதிர்ச்சியடைந்த ஏர் இந்தியா நிறுவனம்!

ஏர் இந்தியா நிறுவனங்களின் விமானங்களில் பயணிகளின் சாமான்களை ஏற்றுதல் மற்றும் இறக்குதல், உணவு எடுத்துச் செல்வது உள்ளிட்ட கனரக தூக்கும் பணியிடங்களை நிரப்புவதற்கான நேர்காணல் நேற்று வரவேற்கப்பட்டது. மும்பை அலுவலகத்தில் மொத்தம் 2,216 பணியிடங்களுக்கான நேர்காணல் நடைபெறவுள்ள நிலையில், கடந்த திங்கள்கிழமை இரவு முதல் 25,000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அலுவலகத்துக்கு வெளியே குவியத் தொடங்கினர்.
Only 600 jobs and 25,000 seekers! #AirIndia recruitment in Mumbai. Now you imagine whatever you want to. Main Kuch Kahoonga Toh Vivad Ho Jaayega! pic.twitter.com/OG4GFMSsGM
— KRK (@kamaalrkhan) July 17, 2024
3 ஆண்டு ஒப்பந்தத்தில் மாதம் ரூ.20,000 முதல் 25,000 வரை சம்பளம் அறிவிக்கப்பட்டது. ஏர் இந்தியாவின் மும்பை அலுவலகத்திற்கு வெளியே நேற்று காலை 25,000 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் நேர்காணலில் நுழைய முற்பட்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. நிலைமை கட்டுக்கடங்காமல் போனதால், ஏர் இந்தியா நிர்வாகம், அனைவரும் விண்ணப்பங்களை மட்டும் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டு, நேர்முகத் தேர்வுக்கு தேர்வு செய்யப்படும் என அறிவித்து நேர்காணலை ரத்து செய்தது.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா