ஐபிஎல் 2026: சென்னை அணியில் தொடரும் தோனி... வீரர்கள் பட்டியல் வெளியீடு!
அபுதாபியில் டிசம்பர் 16ஆம் தேதி நடைபெற உள்ள ஐபிஎல் 2026 மினி ஏலத்தை முன்னிட்டு, அனைத்து அணிகளும் இன்று மாலை வரை தக்கவைப்பு மற்றும் விடுவிப்பு பட்டியலை சமர்ப்பிக்க வேண்டும் என்ற காலக்கெடு விதிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையில், பரஸ்பர பேச்சுவார்த்தையின் மூலம் பல வீரர் வர்த்தக பரிமாற்றங்களும் புதிதாக முடிவுக்கு வந்தன.
OUR LIONS WHO WILL CARRY THE PRIDE.🦁
— Chennai Super Kings (@ChennaiIPL) November 15, 2025
THE DEN AWAITS. 🏟️#WhistlePodu #Yellove pic.twitter.com/MarbLqhQUu
ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தாங்கள் தக்கவைப்பதாக முடிவு செய்த வீரர்களின் அதிகாரப்பூர்வ பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் அணியின் அடையாளமாக இருக்கும் மகேந்திரசிங் தோனி இடம்பெறுவது ரசிகர்களுக்கு பெரும் செய்தியாகிவிட்டது. இதன் மூலம் தோனி 2026 சீசனிலும் மைதானத்தில் தோன்றுவதை சென்னை அணி உறுதி செய்துள்ளது.

தக்கவைத்துள்ள வீரர்கள் பட்டியல் பின்வருமாறு: மகேந்திரசிங் தோனி, ருதுராஜ் கெய்க்வாட், ஆயுஷ் மாத்ரே, டிவால்ட் பிரெவிஸ், உர்வில் படேல், ஷிவம் துபே, ஜேமி ஓவர்டான், ராமகிருஷ்ணா கோஷ், நூர் அகமது, கலீல் அகமது, அன்ஷுல் கம்போஜ், நாதன் எல்லீஸ், ஸ்ரேயாஸ் கோபால், முகேஷ் சவுத்ரி, குர்ஜப்னீத் சிங்,.
மேலும் சஞ்சு சாம்சனை சென்னை அணி வர்த்தக பரிமாற்ற (டிரேடிங்) வாயிலாக பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அபுதாபி ஏலத்தை முன்னிட்டு அணியின் தக்கவைப்பு முடிவுகள், ரசிகர்களிடையே புதிய உச்சக்கட்ட எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
