உலகக் கோப்பையில் ஈரான் பங்கேற்பது உறுதி... போர் பதற்றங்களுக்கு இடையே பிஃபா தலைவர் விளக்கம்!
சர்வதேச அளவில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியிலும், 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஈரான் அணி நிச்சயம் பங்கேற்கும் என்று சர்வதேச கால்பந்து கூட்டமைப்பான பிபா (FIFA) தலைவர் ஜியானி இன்ஃபான்டினோ உறுதிப்படுத்தியுள்ளார். வாஷிங்டனில் நடைபெற்ற ஒரு முக்கியக் கூட்டத்தில் பேசிய அவர், விளையாட்டு என்பது அரசியலுக்கு அப்பாற்பட்டது என்றும், தகுதி பெற்ற அனைத்து அணிகளும் விளையாட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகள் இணைந்து நடத்தும் இந்த உலகக் கோப்பையில், ஈரான் அணி விளையாடுவது குறித்துப் பல்வேறு ஐயப்பாடுகள் எழுந்து வந்தன. குறிப்பாகப் பாதுகாப்பு காரணங்கள் மற்றும் அரசியல் சூழல்களை முன்வைத்து ஈரான் அணி பின்வாங்கலாம் எனக் கூறப்பட்டது. ஆனால், துருக்கியில் பயிற்சி பெற்று வரும் ஈரான் வீரர்களைச் சந்தித்துப் பேசிய பிபா தலைவர், அவர்கள் விளையாடுவதில் மிகுந்த ஆர்வத்துடன் இருப்பதைச் சுட்டிக்காட்டினார்.

ஈரான் அணி தனது முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை ஜூன் 15-ஆம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் எதிர்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது. ஈரானின் போட்டிகளை மெக்சிகோவிற்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையைப் பிபா நிராகரித்துள்ள நிலையில், திட்டமிட்டபடி போட்டிகள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு உலகெங்கிலும் உள்ள கால்பந்து ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
