பால் குடிப்பது நன்மையா? தீமையா?.. வெளிவந்த பகீர் உண்மை!

 
பால்

குழந்தைக்காக தாயிடம் இருந்து சுரக்கும் அதிசய உணவு பால். இளம் வாழ்க்கைக்கு ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்த உணவு. இது ஒவ்வொரு பாலூட்டிகளுக்கும் பொருந்தும். ஒரு காலத்திற்கு, இது ஒரு கட்டாயத் தேவையாக இருந்தது. பின்னர், அவை வளர்ந்து, தாங்களாகவே உணவு தேடத் தொடங்கும் போது, ​​பால் உற்பத்தி நின்றுவிடும். அதன் பிறகு எந்த உயிருக்கும் பால் தேவையில்லை.

மனிதனைத் தவிர, வேறு எந்த உயிரினமும், குழந்தைப் பருவத்திற்குப் பிறகும், பாலை நாடுவதில்லை. மனிதன் மட்டுமே தன் வாழ்நாள் முழுவதும் பாலுக்காக அலைகிறான். மாடு, ஆடு, ஒட்டகம், கழுதை போன்ற பிற விலங்குகளின் பாலுக்காக பயன்படுத்துகிறார்கள். நம் நாட்டு மருத்துவ நூல்கள் பாலை நல்ல மருந்தாக சித்தரிக்கின்றன. இதை குழந்தைகள், முதியவர்கள், நோயாளிகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்கிறார்கள்.

கொஞ்சம் ஆழமாக யோசித்தால் உண்மை புரியும். ஆனால், பால் மருந்து என்பதை மறந்துவிட்டு, அதை சத்து என நினைத்து பலர் குடிக்கின்றனர். பாலில் கால்சியம், புரதம் மற்றும் பொட்டாசியம் நிறைந்துள்ளது. ஒரு கப் பாலில் சுமார் 300 மி.கி கால்சியம் உள்ளது. இது எலும்புகள் மற்றும் பற்களைப் பாதுகாக்க உதவும் என்று பலர் நம்புகிறார்கள். ஆனால், உண்மை அதற்கு நேர்மாறானது. ஒரு ஆய்வில், பால் குடிப்பவர்களுக்கு இடுப்பு எலும்பு முறிவுகள் அதிகம் இருப்பதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பால் அதிகம் சாப்பிடாதவர்களில், இது குறைவாக இருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

பாலில் கால்சியம் அதிகம் இருந்தாலும், பாலின் அமிலத்தன்மை, எலும்புகளில் உள்ள கால்சியத்தை கரைத்து தண்ணீரில் கலந்துவிடும். அதனால், எலும்புகள் வலுவிழந்து போவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இரத்த சோகை, பல்வேறு அலர்ஜி, டைப்-1 சர்க்கரை நோய், பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய், பால் அலர்ஜி, ஆஸ்துமா, சைனஸ் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு பால் காரணியாக உள்ளது. இது தவிர, இறைச்சி தேவைக்காகவும், பால் சுரப்பதற்காகவும், மாடுகளை வேகமாக வளரச் செய்ய, Recombinant Bovine Growth Hormone (RBGH) ஊசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது மூன்றாவது மாதத்தில் இருந்து மாடுகளுக்கு கொடுக்கப்பட்டு 15 மாதங்களுக்குள் அபரிமிதமான வளர்ச்சியை அளிக்கிறது. பசுக்களின் இறைச்சியில் இந்த ஹார்மோன் கலந்துள்ளதால், இதனை உண்ணும் மனிதர்களுக்கு பல பக்கவிளைவுகள் ஏற்படக்கூடும் என்பது விஞ்ஞானிகளின் கருத்து.

  ஊசி போட்ட பசுக்களின் பால் குடிப்பதால், சர்க்கரை நோய், பெண்களுக்கு சீக்கிரம் பூப்பது, அதிக மார்பக வளர்ச்சி, ஆண்களுக்கு மார்பக வளர்ச்சி என பல பிரச்னைகள் உண்டாகிறது. இத்தகைய தீமைகள் நிறைந்த பாலை அதிகம் குடிப்பதற்கு பதிலாக, பாலில்லா பானம் செய்து சாப்பிட்டால், உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web