தனியார் வசம் செல்கிறதா மினி பேருந்து சேவை... ஓபிஎஸ் கடும் கண்டனம்!
தமிழகத்தில் சென்னையை தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் தனியார் பேருந்து சேவை இயக்கப்பட்டு வருகிறது. சென்னை மாநகரம் முழுவதுமே அரசு பேருந்துகள் மட்டுமே . இந்நிலையில் சென்னை புறநகர் பகுதிகளில் மினி பேருந்து சேவையை தனியார் வசம் ஒப்படைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கு ஓபிஎஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து ஓபிஎஸ் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தமிழகத்தில் இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், தற்போது வேகமாக வளர்ச்சியடைந்து வரும் நகரங்களை ஒட்டிய ஊரகப் பகுதிகளிலும் போக்குவரத்துச் சேவையை வழங்கிடும் நோக்கில் மாற்றியமைக்கப்பட்ட விதிமுறைகளுடன் மினி பஸ் திட்டம் தமிழ்நாட்டில் விரிவுபடுத்தப்படும் என கூறப்பட்டு இருந்தது.

இது குறித்த அரசாணையும் வெளியிடப்பட்டது. இந்த அரசாணையில் 30 நாட்களுக்குள் கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை அனுப்பி வைக்குமாறு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மற்றும் இந்தத் திட்டத்தினால் பாதிக்கப்படுவோர் கேட்டுக் கொள்ளப்பட்டனர். அத்துடன் அனைத்தும் 22-07-2024 அன்று நடைபெறும் கூட்டத்தில் எடுத்துக் கொள்ளப்படும் எனவும் கூறப்பட்டிருந்தது.
அந்தக் கூட்டத்தில், சென்னையின் புறநகர் பகுதிகளாக உள்ள மணலி, திருவொற்றியூர், மாதவரம், அம்பத்தூர், வளசரவாக்கம், ஆலந்தூர், பெருங்குடி, சோழிங்கநல்லூர் மண்டலங்களில் முதன்முறையாக தனியார் மினிபேருந்துகளை இயக்க அனுமதி வழங்குவது குறித்து பேசப்பட்டது. இந்தத் தனியார் மினிபேருந்து திட்டத்துக்கு அரசு போக்குவரத்துக் கழகம், அரசு போக்குவரத்து தொழிற்சங்கங்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
முதலில், சென்னைப் புறநகர் பகுதிகள் என்று சொல்லி அறிமுகப்படுத்திவிட்டு, பின்னர் இதனை தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்த திமுக அரசு திட்டமிட்டு வருகிறது. தமிழ்நாடு முழுவதும் தனியார்கள் பேருந்துகளை இயக்க அனுமதிக்கப்பட்ட பின்னர், அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு மூடுவிழா நடத்தவும் திட்டம் உள்ளதா எனத் தெரியவில்லை. பேருந்துகளை தனியார்மயமாக்கல் மூலம், ஏழை எளிய மக்கள் பேருந்து கட்டணத்தை செலுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார்கள். ரயில்களை தனியார்மயமாக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என திமுக தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது. தற்போது தமிழ்நாட்டில் பேருந்து சேவையை தனியார்மயமாக்கத் துடிப்பது நியாயமா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
