ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு ரூ.200 கோடி நிலப் பிரச்சனை காரணமா? அடுத்தடுத்து 6 வழக்கறிஞர்கள் கைது.. நாளுக்கு நாள் திருப்பம்!

 
ஆம்ஸ்ட்ராங்

ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் இதுவரை அடுத்தடுத்து 6 வழக்கறிஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், ரூ.200 கோடி மதிப்புடைய நிலப்பிரச்சனையில் தலையிட்டு சமாதானம் பேசியதால் ஆம்ஸ்ட்ராங் படுகொலைச் செய்யப்பட்டாரா என்கிற கோணத்திலும் விசாரணை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  இதன் அடிப்படையில் இளைஞர் காங்கிரஸ் பிரமுகரும், வழக்கறிஞருமான அஸ்வத்தாமன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வேலூர் சிறைக்குள் அடைக்கப்பட்டுள்ள ரவுடி நாகேந்திரனை விசாரிக்க தற்போது போலீசார் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆம்ஸ்ட்ராங்
பகுஜன் சமாஜ் தமிழக மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலைத் தொடர்பாக அஸ்வத்தாமனுடன் சேர்த்து இதுவரை செம்பியம் போலீசார் 22 பேரை கைது செய்துள்ளனர். 
வடசென்னையின் பிரபல  ரவுடியாக வலம் வந்துக் கொண்டிருந்த நாகேந்திரனின் மகன் அஸ்வத்தாமன். போலீஸ் காவலில் இருந்த பொன்னை பாலு, வழக்கறிஞர் அருள் ஆகியோரிடம் நடத்திய விசாரணையில் அஸ்வத்தாமனுடனான தொடர்பு தெரிய வந்து, அஸ்வத்தாமனிடம் விசாரணை நடத்தி அவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளதாக தெரிகிறது. திருவள்ளுர் மாவட்டம் சோழவரம் ஒரக்காடு ஊராட்சியில் தனியார் கம்பெனிக்கு  சொந்தமான  155 ஏக்கர் இடம் விற்பனைக்கு வந்த நிலையில், மனீஷ் என்பவரும் பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகி ஒருவரும் அந்த இடத்தை வாங்க முடிவு செய்துள்ளனர். அப்போது அஸ்வத்தாமன் தலையிட்டு, 155 ஏக்கர் நிலத்தில் 10 ஏக்கர் நிலத்தை தங்களுக்கு தர வேண்டும் என்று கட்டப்பஞ்சாயத்து செய்ததாக தெரிய வந்துள்ளது. 
இடம் வாங்க முடிவு செய்திருந்த மனீஷும், பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகியும் இது தொடர்பாக ஆம்ஸ்ட்ராங்கிடம் கூறியதாகவும், உடனே ஆம்ஸ்ட்ராங்கும் அஸ்வத்தாமனிடம் பேசியதில், ஆம்ஸ்ட்ராங்குடன் அஸ்வத்தாமன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது.

ஆம்ஸ்ட்ராங் குடும்பம்
மனீஷ் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகிக்கு ஆதரவாக ஆம்ஸ்ட்ராங் தலையிட்டு ஆவணங்கள் சரியாக இருப்பதாகவும், போலீசில் புகார் அளிக்க இருப்பதாக கூறி அஸ்வத்தாமனை எச்சரித்ததாக, தேவையில்லாமல் தலையிட்டு சிக்கலில் சிக்கி கொள்ள வேண்டாம்... சின்ன பையன் போல நடந்துகொள் என  அஸ்வத்தாமனுக்கு ஆம்ஸ்ட்ராங் அறிவுரை கூறியதாகவும் தெரிகிறது.
இந்நிலையில் இது குறித்து சிறையில் தண்டனை அனுபவித்து வரும் தனது தந்தை ரவுடி நாகேந்திரனிடம் அஸ்வத்தாமன் கூறியதும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனால் சிறையில் இருந்து கொண்டே நாகேந்திரன் நிலத்தை வாங்க உள்ள  உரிமையாளர் மனீஷூக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். ஒரு கட்டத்தில் நிலம் தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்தியபோது ஆஸ்ட்ராங்கை துப்பாக்கியை காட்டி மிரட்டியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பின்னர் சமாதானமாக செல்வதாக கூறி, பெரும் தொகை கைமாறியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஆம்ஸ்ட்ராங்கை துப்பாக்கியை காண்பித்து மிரட்டியது உண்மையா? எனவும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சிறையில் இருந்தப்படியே ரவுடி நாகேந்திரன் கொலைக்கு திட்டம் தீட்டி கொடுத்தாரா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!