கள்ளச்சாராயம் ஆறாக ஓடும் இந்த ஆட்சி தான் பொற்கால ஆட்சியா? - நயினார் நாகேந்திரன் ஆவேசம்!
கள்ளச்சாராயம் ஆறாக ஓடும் இந்த ஆட்சி தான் பொற்கால ஆட்சியா? என்று பாஜக தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன் ஆவேசமாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இது போன்ற செயல்களில் ஈடுபட திமுக கவுன்சிலர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கினாரா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
திமுக ஆட்சியில் கள்ளச்சாராயத்தால் பலியிடப்பட்ட உயிர்கள்:
— Nainar Nagenthran (@NainarBJP) September 17, 2025
செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் - 22
கள்ளக்குறிச்சி - 65
இன்னும் எத்தனை உயிர்களை காவு வாங்கப் போகிறது @arivalayam அரசு? கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாரயம் காய்ச்சியதாக கோவிந்தராஜ் (எ) கண்ணு குட்டி, கைது செய்யப்பட்டபோது,… pic.twitter.com/4ZGX7QS1nV
இது குறித்த அவரது பதிவில், “திமுக ஆட்சியில் கள்ளச்சாராயத்தால் பலியிடப்பட்ட உயிர்கள்: செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் - 22, கள்ளக்குறிச்சி - 65 இன்னும் எத்தனை உயிர்களை காவு வாங்கப் போகிறது திமுக அரசு? கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாரயம் காய்ச்சியதாக கோவிந்தராஜ் (எ) கண்ணு குட்டி, கைது செய்யப்பட்டபோது, அவன் திமுக நிர்வாகியே இல்லை என்று கதை கட்டியது திமுக. இன்றோ திமுக கவுன்சிலரும் இளைஞரணி நிர்வாகியுமான சுரேஷ் குமார் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்ததற்காகக் கைதாகியுள்ளார். இதற்கு என்ன கதை கூறப் போகிறார்கள்?

கள்ளச்சாராயம் விற்பது தான் திமுக-வின் இளைஞர் அணி கோட்பாடா? இது போன்ற செயல்களில் ஈடுபட தான் திமுக கவுன்சிலர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கினாரா? கள்ளச்சாராயம் ஆறாக ஓடும் இந்த ஆட்சி தான் பொற்கால ஆட்சியா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
