நவம்பர் 4ம் தேதி இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சர் கிதியோன் இந்தியா வருகை!
இஸ்ரேல் நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி கிதியோன் அடுத்த வாரம் இந்தியாவிற்கு வருகை தர உள்ளார். தனது இந்த பயணத்தின் போது, இந்திய அரசின் பல்வேறு உயர்மட்ட தலைவர்களுடன் சந்தித்து, இருதரப்பு உறவுகள் மற்றும் பிராந்திய முன்னேற்றங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

இஸ்ரேல் அரசு வெளியிட்ட தகவலின்படி, கிதியோன் வரும் நவம்பர் 4-ந்தேதி இந்தியாவுக்கு வருகிறார். அவர் இந்தியாவில் இரண்டு நாட்கள் தங்கி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்த பயணத்தின் போது பல முக்கிய ஒத்துழைப்புகள் குறித்து ஆலோசனைகள் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.

மேலும், கிதியோன் தனது பயணத்தின் போது இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி எஸ். ஜெய்சங்கரை சந்தித்து உரையாட உள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
