உறக்கத்தில் இருக்கும் லேண்டர் , ரோவரை எழுப்ப இஸ்ரோ முயற்சி...!

 
ரோவர்

நிலவின் தென் துருவத்தை ஆராய்ச்சி செய்வதற்காக இந்தியாவின் சந்திராயன் 3  வெற்றிகரமாக நிலவில் இறங்கி 14 நாட்கள்  பல்வேறு ஆராய்ச்சிகளை செய்து முடித்தது. நிலவில் இருள் சூழும் காலத்தில் பிரக்யான் ரோவர் 14 நாட்கள்  தூங்கச் சென்று விடும்.  அந்த 14 நாட்கள் நேற்றுடன் முடிவடைந்துவிட்டது. இந்நிலையில் இன்று, தென் துருவத்தில் சூரியன் வந்ததும் அது இயங்க வைக்கப்பட உள்ளது. 

சந்திராயன்3
அதற்கான அனைத்து முயற்சிகளும் நேற்றே தொடங்கப்பட்டு விட்ட   நிலையில் இந்த விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர்  2ம் இன்று  நிலவில் மீண்டும் வெற்றிகரமாக கண் விழிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் நிலவில் தற்போது மைனஸ் 253 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவி வருகிறது.   சந்திரயான் 3ன் லேண்டர், விக்ரம், அல்லது அதன் ரோவர், பிரக்யான்  இரண்டுமே  நிலவு பயணங்களுக்கான பொதுவான ஹீட்டர்களை  கொண்டிருக்கவில்லை.   நடுங்கும்  குளிரை தாக்கு பிடிக்க எந்த வசதியும்   செய்யப்படவில்லை.  

சந்திராயன் 3
 அத்தகைய சக்தி அமைப்புகள் இல்லாததால் சந்திரயான்-3  இன்று கண் விழிக்குமா என  திக் திக் என ஆராய்ச்சியாளர்கள் கவனித்து வருகின்றனர்  தரையிறங்கும்போது ஏற்பட்ட கடைசி நேர தடுமாற்றத்தைக் கூட சரியாக கவனித்து சற்று தள்ளி சந்திரயான் தரை இறங்கியதும், அங்கிருந்து கொண்டே விக்ரம் லேண்டர் மூலம் பல்வேறு ஆய்வுகளை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளது. இதனால் நிச்சயம் அவை இன்று கண் விழிக்கும் என்கின்றனர்   இஸ்ரோ விஞ்ஞானிகள்.   மேலும் பல முக்கிய ஆய்வுகளை நடத்தி முடிக்கும் என்கின்றனர். 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web