திருப்பதியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் சாமி தரிசனம்!!

 
இஸ்ரோ விஞ்ஞானிகள்

உலகில் முதன் முறையாக நிலவின் தென் துருவத்தை ஆராய்ச்சி செய்ய சந்திராயன் 3 விண்கலத்தை இந்தியா வெற்றிகரமாக விண்ணில் ஏவியுள்ளது . தற்போது சூரியனை ஆராய்ச்சி செய்வதற்காக ஆதித்யா எல்1 என்ற விண்கலன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த விண்கலம் நாளை விண்ணில் ஏவப்பட உள்ளது இதற்கான 24 மணி நேர கவுண்ட்டவுன் இன்று காலை 11.50க்கு தொடங்கியது. ஆதித்யா எல்1 சூரியனின் வளிமண்டலத்தின்  வெளிப்பகுதியான கொரோனாவையும்,  சூரியனின் முதல் மூன்று அடுக்குகளையும் ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.  

இஸ்ரோ விஞ்ஞானிகள்


சூரியனை ஆராய்ச்சி செய்யும் ஆதித்யா எல்1 விண்கலம் தற்போது ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதிஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.  செப்டம்பர் 2ம் தேதி நாளை சனிக்கிழமை காலை 11.50 மணிக்கு ஆதித்யா எல்-1 விண்கலம் பிஎஸ்எல்வி எக்ஸ்எல் ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆதித்யா எல்1


ராக்கெட் ஏவுவதற்கான முன்னேற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.   ராக்கெட்டின் உள் சோதனைகள் முடிக்கப்பட்டு சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இன்று காலை 11.50 மணிக்கு ராக்கெட் ஏவுவதற்கான 24 மணி நேர கவுன்டவுன் தொடங்கி உள்ளது. இந்நிலையில், இஸ்ரோ விஞ்ஞானிகள் ஆதித்யா எல்-1 திட்டம் வெற்றி பெற வேண்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்தனர். ஆதித்த்யா எல்-1 விண்கலத்தை போன்று சிறிய அளவிலான மாதிரியை ஏழுமலையான் கோயிலில் வைத்து சாமி தரிசனம் செய்தனர்.   ஏழுமலையான் கோவிலில் விஞ்னானிகளுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web