நவம்பர் 2ம் தேதி இஸ்ரோவின் எல்.வி.எம் 3 ராக்கெட் ஏவல்!

 
பழவேறகாடு
 

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து ‘எல்.வி.எம்–3’ ராக்கெட் மூலம் ஜிசாட்–7 எனப்படும் சி.எம்.எஸ்–03 செயற்கைக்கோளை நவம்பர் 2ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5.26 மணிக்கு விண்ணில் ஏவ உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட கவுண்ட்டவுன் நவம்பர் 1ம் தேதி மாலை 5.26 மணிக்கு தொடங்கவுள்ளது.

பழவேற்காடு

இந்த ராக்கெட் ஏவல் நிகழ்வை முன்னிட்டு ஸ்ரீஹரிகோட்டா அருகே உள்ள பழவேற்காடு பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் அந்த நாளில் கடலுக்குச் செல்லாமல் இருக்குமாறு மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். ஏவுதளத்திலிருந்து விழும் பாகங்கள் கடலில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்பதால் இந்த முன்னெச்சரிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மீனவர்கள் வேலைநிறுத்தம் மீன் படகு

விண்ணில் ஏவப்படும் இந்த ராக்கெட்டை நேரில் காண விரும்பும் பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்காக ஸ்ரீஹரிகோட்டாவில் 10,000 பேருக்கான பார்வையாளர் மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் அமர்ந்து எல்.வி.எம்–3 ராக்கெட் ஏவப்படுவதை காண விரும்புவோர் https://lvg.shar.gov.in என்ற இணையதளத்தில் சென்று முன்பதிவு செய்யலாம் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!