பவதாரிணி கடைசி ஆசையை உடனே நிறைவேற்றிய இளையராஜா... நெகிழ்ச்சி... !

 
பவதாரணி

தமிழ் திரையுலகில் பிரபல பாடகியும், இசையமைப்பாளரும் ஆன பவதாரிணி ஜனவரி 25ம் தேதி புற்றுநோயால் காலமானார்.  இளையராஜாவின் இரண்டாவது மகளான  பவதாரிணியின் கடைசி ஆசை ஒன்றை  தந்தை இளையராஜா நிறைவேற்றி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  பவதாரணி இசை குடும்பத்தை சேர்ந்தவர். இவரது  பல பாடல்கள்   இனிமையான குரலுக்கென பல கோடி பேர் ரசிகர்களாக உள்ளனர். ஒரு பக்கம் தனது தந்தையின் படங்களிலும்,  இன்னொரு பக்கம் தனது தம்பி யுவன் சங்கர் ராஜாவின் இசையிலும் பாடல்களை பாடி வந்தார். அழகி படத்தில் வரும் ‘ஒளியிலே தெரிவது தேவதையா..’   முதல்,  ‘ஆத்தாடி ஆத்தாடி செம்பருத்தி பூக்காரி’ பாடல் வரை   ரசிகர்களின் மனங்களில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. 

பவதாரணி


இலங்கை, கொலம்போவில் உள்ள  பிரபல மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சைக்காக பவதாரிணி  அனுமதிக்கப்பட்டிருந்தார்.  திடீரென்று சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.  இவரது உடல் ஜனவரி 26 ம்தேதி சென்னையில் பொதுமக்கள் திரையுலகினர் அஞ்சலி செலுத்தினர். அதன் பிறகு  சொந்த ஊரான தேனியில் பவதாரணியில் உடல்  நல்லடக்கம் செய்யப்பட்டது.  பவதாரிணி தனது சிகிச்சைக்காக இலங்கைக்கு சென்ற போது, அவருக்கு அங்கு உதவியாக இருந்த  நண்பர் ஒருவர் தற்போது பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்  பவதாரிணி உயிரிழப்பதற்கு முன்னர் செய்த விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதன்படி  இளையராஜா, இலங்கையில் கடந்த மாத இறுதியில் இசை நிகழ்ச்சிக்காக வந்திருந்தார்.   அப்போது, அங்கு சிகிச்சையில் இருந்த பவதாரிணி, தந்தையை பார்த்தே ஆக வேண்டும் என்று அடம் பிடித்துள்ளார்.

பவதாரணி

உடனே   பவதாரணி தங்கியிருந்த அறைக்கு பக்கத்து அறையில் இளையராஜாவிற்கு அறை ஒதுக்கப்பட்டது.   இளையராஜா, தனது மகளுடன் அவர் இறப்பதற்கு முந்தைய நாள் 2 மணி நேரம் செலவிட்டார்.   பாடகி பவதாரிணி, தனது இறப்பை முன்கூட்டியே கணித்திருந்தார்.  இலங்கைக்கு சிகிச்சைக்காக செல்வதற்கு முன்பு   இளையராஜா, தம்பி யுவன் சங்கர் ராஜா, அண்ணன் கார்த்திக் ராஜா, உறவினர்களான கங்கை அமரன், பிரேம் ஜி, வெங்கட் பிரபு  அனைவரையும் நேரில் சந்தித்து  அனைவருக்கும் பிடித்த பொருட்களை வாங்கி கொடுத்துள்ளார்.   தனக்கு வந்திருக்கும் புற்றுநோய் குறித்த தீவிரத்தை உணர்ந்ததால் தான் இப்படி செய்ததாக   கூறப்படுகிறது. 

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web