நடுத்தர மக்களுக்கு இரட்டை போனஸாக இருக்கும்... பிரதமர் மோடியின் முழு உரை!

 
மோடி

ஜிஎஸ்டி 2.0 நாளை முதல் அமல்; பிரதமர் மோடி உரையின் முக்கிய அம்சங்கள்

பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், புதிய தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் நாளை செப்டம்பர் 22ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று அறிவித்தார்.

நவராத்திரி தொடங்கும் இந்த நாளில், இந்த புதிய சீர்திருத்தங்கள் ஜிஎஸ்டி பச்சட் உத்சவ் அல்லது ஜிஎஸ்டி சேமிப்பு விழா என்று அழைக்கப்படும் என்றும், இது இந்தியாவின் வளர்ச்சியை வேகப்படுத்தும் என்று பேசிய பிரதமர் மோடி, 2017ம் ஆண்டு முதல் ஜிஎஸ்டி சீர்திருத்தங்களுக்கு முந்தைய வரி அமைப்புகளின் சிக்கல்களை நினைவு கூர்ந்தார். பல்வேறு வரிகள் மற்றும் சுங்கச்சாவடிகள் காரணமாக ஒரு நகரத்திலிருந்து மற்றொரு நகரத்திற்கு பொருட்களை அனுப்புவது எவ்வளவு கடினமாக இருந்தது என்பதை அவர் விளக்கினார்.

உதாரணமாக வெளிநாட்டு செய்தித்தாளில் வந்த ஒரு செய்தியைக் குறிப்பிட்ட பிரதமர் மோடி, அதில் பெங்களூரிலிருந்து 570 கி.மீ தொலைவில் உள்ள ஹைதராபாத்திற்கு பொருட்களை அனுப்புவது மிகவும் கடினமாக இருந்ததால், ஒரு நிறுவனம் முதலில் ஐரோப்பாவிற்கு அனுப்பி, அங்கிருந்து ஹைதராபாத்திற்கு அனுப்ப விரும்பியதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஜிஎஸ்டி

புதிய ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் வரி அமைப்பை எளிதாக்கி, பொருட்களின் விலைகளைக் குறைத்து, சேமிப்பு மற்றும் முதலீட்டை அதிகரிக்கும் என்று மோடி வலியுறுத்தினார். மேலும் பல அத்தியாவசியப் பொருட்களுக்கு வரி இல்லை அல்லது 5% ஜிஎஸ்டி மட்டுமே விதிக்கப்படும் என்றும், இது நடுத்தர மக்களுக்கு ஒரு இரட்டை போனஸாக இருக்கும் என்றும் அவர் கூறினார். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு எம்எஸ்எம்இக்கள் முக்கியப் பங்கு வகிக்கும்” என்று தெரிவித்தார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?