சிகரெட்டை விட்டால் நான் யாரையாவது கொலை செய்து விடுவேன் ... இத்தாலி பிரதமர் மெலோனி பரபரப்பு!
இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி எகிப்தில் நடைபெற்ற காசா உச்சி மாநாட்டில் கலந்து கொண்டார்.அந்த மாநாட்டில் உலகத் தலைவர்கள் கலந்துரையாடிக் கொண்டிருந்த போது, துருக்கியை புகைப்பிடிக்காத நாடாக மாற்ற அந்நாட்டு அதிபர் உறுதியேற்றுள்ளார். தொடர்ந்து இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியின் புகைப்பிடிக்கும் பழக்கம் குறித்து கேள்வி எழுப்பினார். இதுகுறித்து அவர் மெலோனியிடம், ‘நீங்கள் பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறீர்கள்.

ஆனால், நீங்கள் புகைப்பிடிப்பதை நிறுத்த வேண்டும்’ என கோரிக்கை விடுத்தார். பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன், இங்கிலாந்து தொழிலாளர் கட்சித் தலைவர் கெய்ர் ஸ்டார்மர் ஆகியோர் சிரித்தனர். மக்ரோன், ‘அது முடியாத காரியம்’ ‘எனக்குத் தெரியும், புகைப்பிடிப்பதை கை விட்டால், ஒருவேளை நான் யாரையாவது கொலை செய்து விடுவேன்’ என்று நகைச்சுவையாகக் கூறினார்.

சில ஆண்டுகளாக புகைப்பழக்கத்தை கைவிட்டிருந்த நிலையில், மீண்டும் மெலோனி புகைக்கத் தொடங்கியுள்ளார். இதனை சமீபத்தில் அவரே தனது புத்தகத்தில் குறிப்பிட்டிருந்தார். இதே மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப் மெலோனி குறித்து ‘ஒரு பெண்ணை ‘அழகானவர்’ என்று அழைப்பது இப்போது அரசியல் ரீதியாக ஆபத்தானது; ஆனால் நான் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை. இவர் ஓர் அழகான இளம் பெண்’ என புகழாரம் சூட்டினார். நீங்கள் சிறந்த மற்றும் வெற்றிகரமான அரசியல்வாதி’ என்று பாராட்டினார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
