ரொம்ப கேவலமான விஷயம்... சென்னை மேயரிடம் ஆதங்கத்தை வெளிப்படுத்திய விஷால்!

 
விஷால்

மிக்ஜாம் புயலை விட, திமுக அரசு, சென்னையில் மழை நீர் தேங்காமல் இருப்பதற்காக செலவு செய்த ரூ.4,000 கோடி தான் பெரும் இடியாய் மக்கள் மனதில் இறங்கியிருக்கிறது. இத்தனைக்கும் கலைஞர் ஆட்சியில் எம்.எல்.ஏ.,க்கள் மக்களுக்கு களத்தில் இறங்கி இது போன்ற ஆபத்து காலங்களில் உதவுவார்கள். இந்த முறை அப்படியும் இல்லை என்கிற குரல்கள் ஒலிக்க துவங்கியுள்ளன. இந்நிலையில், இதெல்லாம் ரொம்ப கேவலமாக இருக்கிறது. எம்.எல்.ஏ.க்கள் களத்தில் இறங்கி மக்களுக்கு உதவினால் நன்றாக இருக்கும் என்று சென்னை மாநகராட்சி மேயர் ப்ரியாவை டேக் செய்து நடிகர் விஷால், அவரது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். இத்தனைக்கும் நடிகர் விஷாலும், அமைச்சர் உதயநிதியும் கல்லூரி நண்பர்கள். சரி.. பெரிய இடத்திலிருந்து குரல்கள் ஒலித்தாலாவது  மக்களுக்கு நல்லது நடக்காதா? என்று ஏக்கமுடன் எதிர்பார்கின்றனர் மக்கள்.


அந்த வீடியோவில், "புயல், மழையால் முதலில் மின்சாரம் துண்டிக்கப்படும். அதன்பிறகு தண்ணீர் தேங்க ஆரம்பிக்கும். பின்னர், தண்ணீர் வீட்டுக்குள் நுழைந்துவிடும் என்பது வழக்கமான விஷயம். அதேபோல தான் அண்ணா நகரில் இருக்கும் என்னுடைய வீட்டில் தண்ணீர் நுழைந்துவிட்டது. அண்ணா நகரிலேயே இந்த கதி என்றால் மற்ற இடங்களில் யோசித்துப் பாருங்கள். 2015 ஆம் ஆண்டு நடக்கும்போது எல்லோரும் இறங்கி வேலை செய்தோம். முடிந்த அளவுக்கு பொதுமக்களுக்கு சேவை செய்தோம்.

எட்டு ஆண்டுகளுக்கு பிறகும் அதைவிட மோசமாக இருப்பது கேள்விக்குறியாக உள்ளது. மழைநீர் சேமிப்பு, வடிகால் தொடர்பான சென்னை மாநகராட்சியின் திட்டம் என்ன ஆனது எனத் தெரியவில்லை. நான் ஒரு வாக்காளர் என்ற முறையில் இதனை கேட்டுக் கொள்கிறேன். சென்னை தொகுதி எம்எல்ஏக்கள் தயவு செய்து வெளியில் வந்து சரிசெய்து கொடுத்தால் நன்றாக இருக்கும். அந்தந்த தொகுதி எம்எல்ஏக்கள் வெளியே வந்து உதவினால் பொதுமக்களுக்கு பாதுகாப்பாகவும் நம்பிக்கையாகவும் இருக்கும்.

ப்ரியா சென்னை மாநகராட்சி பட்ஜெட்

என் வீட்டில் இருக்கும் அப்பா, அம்மா பயத்தில் உள்ளனர். சின்ன மழைக்கே தண்ணீர் தேங்கும். ஆனால், இப்போது எல்லா இடத்திலும் தண்ணீர் தேங்கியிருப்பது தர்மசங்கடமான, கேவலமான ஒரு விஷயமாக பார்க்கிறேன். தயவு செய்து உடனடியாக இதனை சரி செய்ய மாநகராட்சி முன்வர வேண்டும். எதற்காக வரி கட்டுகிறோம் என கேட்க வைத்துவிடாதீர்கள். உதவுங்கள்" எனத் தெரிவித்துள்ளார்.

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

From around the web