“என் குழந்தை தான்...” மாதம்பட்டி ரங்கராஜ் பரபரப்பு வாக்குமூலம்!

 
மாதம்பட்டி ரங்கராஜ்

சமையல் கலை நிபுணரும் நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் மீது பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா முன்வைத்த குற்றச்சாட்டில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஜாய் கிரிசில்டா பிறந்த ஆண் குழந்தைக்கு தந்தை நான் தான் என்று ரங்கராஜ் மகளிர் ஆணையம் முன்னிலையில் ஒப்புக்கொண்டார்.

சில மாதங்களுக்கு முன்பு, தன்னை திருமணம் செய்து கர்ப்பமாக்கி பின்னர் ஏமாற்றிவிட்டதாக ஜாய் கிரிசில்டா சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டு வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து இருவருக்கு இடையிலான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையிலுள்ளது. குழந்தை பிறந்ததும், அதன் புகைப்படத்தை ரங்கராஜின் படத்துடன் வைத்து ஜாய் கிரிசில்டா பகிர்ந்ததை சமூக வலைதளங்களில் பலர் கவனித்தனர்.

ஜாய் கிரிசில்டா மாதம்பட்டி ரங்கராஜ்

இந்த நிலையில், சமீபத்தில் நடைபெற்ற விசாரணையில் ஜாய் கிரிசில்டாவை இரண்டாவது முறையாக திருமணம் செய்ததை ரங்கராஜ் ஒப்புக் கொண்டதாக மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், அந்தக் குழந்தையின் தந்தை தானென்றும் ரங்கராஜ் சம்மதித்துள்ளார். இதனால் DNA பரிசோதனை தேவையில்லை என ஆணையம் கூறியுள்ளது.

குழந்தையின் பராமரிப்பு பொறுப்பை மறுக்க அனுமதிக்க கூடாது என்றும், வழக்கு முடியும் வரை தேவையான நிதி உதவி வழங்க வேண்டும் என்றும் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ரங்கராஜ் மீது சட்டரீதியான நடவடிக்கை தொடர பரிந்துரையும் வழங்கப்பட்டுள்ளது.

ஜாய் கிரிசில்டா

இந்த விவகாரம் பொது மற்றும் சமூக வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது; வழக்கின் அடுத்த கட்ட விசாரணைக்கு அனைவரும் கவனம் செலுத்தி வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?