ஆகஸ்ட் 26ல் ஐடிவிங் ஆலோசனை கூட்டம்!! தேர்தலுக்கு மாஸ்டர் ப்ளான் ரெடி!!

 
விஜய்

தமிழ் திரையுலகில் இளையதளபதியாக ரசிகர்களாக் கொண்டாடப்படும் நடிகர் விஜய்யின் சமீபத்திய செயல்பாடுகள் அவரது அடுத்தக் கட்ட அரசியல் நகர்வுகளின் அடிப்படையில் உள்ளன.  தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளீல்  அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கு உதவித்தொகை கொடுத்தது, இரவு நேர பயிலகம், சட்டம் தொடர்பான வகுப்புகள் என தீவிரமாக செயல்பட்டு வருகிறார். அந்த வரிசையில் தற்போது தனது ஐடி விங்கை பலப்படுத்த ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.   அகில இந்திய தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் இது குறித்து செய்திக்குறிப்பு ஒன்றை விடுத்துள்ளார்.

விஜய்

அதில்   ‘மக்கள் இயக்க செயல்பாடுகளை சமூக வலைதளங்களான  ஃபேஸ்புக், ட்விட்டர், யூடியூப், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப்  மூலம்   மாவட்டம், இளைஞரணி, தொண்டரணி, மாணவரணி, வழக்கறிஞர் அணி, மகளிர் அணி, வர்த்தக அணி, விவசாய அணி, தொழிற்சங்க அணி, ஊடக அணி மற்றும் நகரம், ஒன்றியம், வார்டு, பகுதி, கிளை, பூத் கமிட்டி உறுப்பினர் வரை செயல்வீரர்களாக செயல்படுவது குறித்த  கூட்டம் ஆகஸ்ட் 26ம் தேதி நடைபெறும். இந்த ஆலோசனை கூட்டம்  சனிக்கிழமை காலை 8.55 மணிக்கு   சென்னை பனையூரில் உள்ள அகில இந்திய தலைமை தளபதி மக்கள் இயக்க அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

புஸ்ஸி ஆனந்த்

இதில் கலந்து கொள்ள  மாவட்டத்தில் உள்ள தொகுதிக்காக பரிந்துரை செய்த  3  பேரை  தவறாமல் தங்களுடன் ஆலோசனை கூட்டத்திற்கு அழைத்து வந்து கலந்துகொள்ள வேண்டும் என   அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்’ என குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே நடைபெற்ற ஊரக உள்ளாட்சி இடைத் தேர்தல் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கணிசமான இடங்களை பிடித்துள்ளது விஜய் மக்கள் இயக்கம்.   இந்நிலையில், அடுத்த வரும் நாடாளுமன்ற தேர்தலில் எடுக்கப்பட உள்ள நடவடிக்கைகளை  குறி வைத்தே விஜய்யின் செயல்பாடுகள் இருப்பதாக அரசியல் மற்றும் திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  

 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை