அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. ப்ரோமோஷன், அகவிலைப்படி உயர்வு!!

 
அரசு அலுவலகம்

இந்தியா முழுவதும்  மொத்தம் உள்ள 47.58 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 69.76 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி மற்றும் அகவிலைப்படி நிவாரணம் ஆண்டுக்கு 2 முறை உயர்த்தப்பட்டு வருகிறது. அதன்படி   ஜனவரி முதல் ஜுன் மற்றும் ஜூலை முதல் டிசம்பர்  என இருபிரிவுகளில் இந்த அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது.  அந்த வகையில்  மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 4 சதவீதம் உயரலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜூலை மாதத்தில் நாட்டின் சில்லறை பணவீக்கம் 15 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளதால் அகவிலைப்படி  அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

அதிர்ச்சி!! நாடு முழுவதும் 2 நாட்கள் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்!! இந்த வாரம் 3 நாட்கள்  வங்கிகள் செயல்படாது!!

அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை என்றாலும், விரைவில் வரும் என்கின்றன அதிகாரப்பூர்வ வட்டாரங்கள்.  இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு, பதவி உயர்வுக்கான அறிவிப்பும், அதற்கான விதிமுறைகளில் மாற்றங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 7வது ஊதியக் குழுவின் சம்பள மேட்ரிக்ஸ் மற்றும் ஊதிய உயர்வுகள் பாதுகாப்பு சிவில் ஊழியர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில், அமைச்சகத்தின் பாதுகாப்பு துறையை சேர்ந்த ஊழியர்களுக்கான புரமோஷன்கள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.    

அரசு ஊழியர்களின் குடும்பத்தினருக்கு வாழ்நாள் முழுவதும் பென்ஷன்! தமிழக அரசின் அதிரடி அரசாணை

ஊழியர்களுக்கான பதவி உயர்வு தகுதி குறித்த புதிய விதிமுறைகளை பாதுகாப்பு அமைச்சகம்/ வெப்சைட்டில் பதிவேற்றியுள்ளது.  மத்திய அரசின் அனைத்து துறை ஊழியர்களுக்கும் அகவிலைப்படி, பதவி உயர்வு போன்றவை குறித்து, அறிவிப்புகள் நேரத்தில் வெளியிடப்படும்.. பாதுகாப்பு அமைச்சக ஊழியர்களின் பதவி உயர்வுக்கான தகுதி விதிமுறைகளில் மாற்றங்களை செய்துள்ளதும் இதற்கு ஒரு காரணம் என்கின்றனர் அரசு ஊழியர்கள்.  அவர்களின்  குறைந்தபட்ச தகுதி சேவையின் மாற்றம் காரணமாக பலரும் பதவி உயர்வு பெறுவதற்கான வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.  இந்த அறிவிப்பு மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சக ஊழியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web