பிக்பாசில் 2 பேருக்கு அரஸ்ட் வாரண்ட்... கதறி அழும் போட்டியாளர்கள்.. புரோமோ வீடியோ.!!

 
அக்‌ஷயா வினுஷா

 
பிக்பாஸ் சீசன்   7 அக்டோபர் 1ம் தேதி பலத்த எதிர்பார்ப்புக்கிடையில் தொடங்கியது. தொடங்கிய ஒரு வாரத்திற்குள்ளேயே பஞ்சாயத்துக்கள், சண்டைகள், சச்சரவுகள் சர்ச்சைகள் வரத் தொடங்கிவிட்டன.   18 போட்டியாளர்கள் கலந்து கொண்ட பிக்பாஸ்  7  இரண்டு வீடுகளில் நடைபெற்று வருவதால் இதில் பிரச்சனைகளும் டபுள் டபுளாக வருகிறது. முதல் வார இறுதியில் மக்கள் அளித்த வாக்குகளின் அடிப்படையில் குறைவான வாக்குகளை பெற்ற அனன்யா ராவ் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.



மீதமுள்ள  17 போட்டியாளர்களில்  பவா செல்லதுரை, தனக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக தானாக முன்வந்து பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறினார். இதனால் தற்போது எஞ்சியுள்ள 16 போட்டியாளர்களிடையே ஆட்டம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் தற்போது வெளியாகி உள்ள புரோமோவில் புது டுவிஸ்ட் ஒன்றை கொடுத்துள்ளார் பிக்பாஸ்.  கடந்த ஒரு வார நிகழ்ச்சியில்  சுவாரஸ்யம் இல்லாத போட்டியாளர்கள் என இருவரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு அரெஸ்ட் வாரண்ட் பிறப்பித்து சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார்

அக்‌ஷயா வினுஷா

 

பிக்பாஸ். அதன் அடிப்படையில் அக்‌ஷயா மற்றும் வினுஷா தேவி  இருவரும்  பிக்பாஸ் சீசனில் முதன்முறையாக சிறைக்கு செல்ல உள்ளதாக பிக்பாஸ் அறிவித்துள்ளார்.அக்‌ஷயா ஜெயிலுக்கு செல்ல உள்ளதாக பிக்பாஸ் அறிவித்ததும் அதை சுமால் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் கைதட்டி கொண்டாடினர். இதனால் மனமுடைந்துபோன அக்‌ஷயா, கேமரா முன் நின்று அழும் காட்சிகளும் இந்த புரோமோவில் இடம்பிடித்துள்ளன.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web