ஜெயிலர் பட நடிகர் மாரடைப்பால் காலமானார்!! சோகத்தில் திரையுலகம்!!

 
மாரிமுத்து

சின்னத்திரை சீரியல்களில் டிஆர்பி ரேட்டிங்கில் முண்ணனியில் இருப்பது எதிர்நீச்சல். .இந்த சீரியலில் நடித்து வருவதன் மூலம் தமிழ் குடும்ப உறுப்பினர்களில் ஒருவராகவே மாறிவிட்டவர் நடிகர் மாரிமுத்து. சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ஜெயிலர் திரைப்படத்திலும் இவரது கதாபாத்திரம் வெகுவாக பேசப்பட்டது.

தமிழ் திரையுலகில் பிரபல குணச்சித்திர நடிகர் மாரிமுத்து. இவர் மாரடைப்பால் காலமானார். இவருக்கு வயது 57. இவரது திடீர் மறைவு திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாரிமுத்து  வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து புகழ்பெற்றவர் .


 

 இன்று காலை டப்பிங் பணிகளை முடித்து விட்டு, வீடு திரும்பும் போது, அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. ரஜினியின் ‘ஜெயிலர்’ உட்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.  
இயக்குனர் வஸந்திடம் உதவியாளராக பணிபுரிந்தவர்.  இவர்  கண்ணும், கண்ணும், புலிவால் ஆகிய படங்களை இயக்கியவர். அத்துடன்   50க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்து புகழ்பெற்றவர்.

மாரிமுத்து


பரியேறும் பெருமாள், விக்ரம், ஜெயிலர் என பல வெற்றிப்படங்களில் இவரது நடிப்பு ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொலைக்காட்சி தொடர்  மூலம் பட்டிதொட்டியெங்கும் புகழ் பெற்றவர். இவரது திடீர் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள், சின்னத்திரை நட்சத்திரங்கள், நண்பர்கள் , ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web