”ஜெயிலர்” சக்சஸ் மீட்... ’தலைவர் நிரந்தரம்’ கேக் வெட்டி கொண்டாட்டம்!!

 
ஜெயிலர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படம் ரசிகர்கள், பொதுமக்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இருந்த போதிலும் வசூல் ரீதியாக சாதனை படைத்துள்ளதாக படக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜெயிலர்

ஜெயிலர் திரைப்படம்  நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர்கள் ரஜினிகாந்த், ரம்யாகிருஷ்ணன், தமன்னா, யோகிபாபு மற்றும் பல முண்ணனி நட்சத்திரங்கள்  நடித்து உலகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.  ‘ஜெயிலர்’ திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி, ரூ.500 கோடி வசூலைக் கடந்து சாதனைப் புரிந்துள்ளது.

ஜெயிலர்


 ஜெயிலர் திரைப்படம் வெளியாவதற்கு முன்பு இமயமலை நடிகர் ரஜினிகாந்த் கிளம்பி சென்றார்.  கடந்த வாரத்தில் சென்னை திரும்பிய நிலையில் ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றி விழா சத்தமில்லாமல் கொண்டாடப்பட்டுள்ளது.  இப்போது படத்தின் வெற்றியை ‘தலைவர் நிரந்தரம்’ என எழுதப்பட்ட கேக் வெட்டி சென்னையில் படக்குழுவினர் கொண்டாடி உள்ளனர். இதில் நெல்சன், அனிருத், ரம்யா கிருஷ்ணன் உப்டப படக்குழுவினர் பலர்  கலந்து கொண்டனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web