காரோட வர்றேன்னு சொன்ன மகன் உசிரோடவே வரல... கண்ணீர் விட்டு கதறித் துடிக்கும் தாய்... !

 
அரவிந்த்ராஜ்

இன்று மதுரை மாவட்டம் பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதே பகுதியில் வசித்து  வந்த மாடுபிடி வீரர் 25 வயது   அரவிந்தராஜ் கடந்த ஆண்டு  ஜல்லிக்கட்டில் 9 மாடுகளை பிடித்தார். 10 வது மாடு இவரை கொம்புகளால் குத்தியதில் படுகாயம் அடைந்தார்.  உடனடியாக சிகிச்சைக்காக   ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அங்கே சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.  


 

உயிரிழந்த அரவிந்த்ராஜ் குடும்பத்தினருக்கு அரசுசார்பாக ரூ3 லட்சமும்,  சட்டமன்ற உறுப்பினர் சார்பாக ரூ2 லட்சமும்  வழங்கப்பட்டது.மாடுபிடி வீரர் அரவிந்த்ராஜ் உயிரிழந்த ஓராண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பாலமேட்டில்  அவருடைய வீட்டு வாசலில் அவருடைய   படம் வைக்கப்பட்டு   மாடுபிடி வீரர்களும் பொதுமக்களும் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.  அரவிந்த்ராஜ் தாய் தெய்வானை ” என்னுடைய மகன் பல ஜல்லிக்கட்டு பங்கேற்று பல பரிசுகள் பெற்றுள்ளார்.  

ஜல்லிக்கட்டு

பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில்  காருடன் வருவேன் என கூறிவிட்டு போனவன் உயிரோடு வரவில்லை.  அவன் இல்லாதது எனக்கு பெரிய இழப்பு. உடல்நிலை பாதிக்கப்பட்டு அவன் நினைவாகவே இருக்கிறேன்.  என்னுடைய மகனுக்கு நினைவுத்தூள் மற்றும் கல்லறை அமைப்பதாக கூறியுள்ளனர். வீரர்கள் கவனமாக களத்தில் விளையாட வேண்டும்.” எனக் கூறினார்.  அரவிந்த்ராஜ் தந்தை  ராஜேந்திரன்  ”என்னுடைய மகன் பல போட்டிகளில் கலந்து கொண்டு   பல பரிசுகளை பெற்றுள்ளார். அவன் இல்லாதது பெரும் இழப்பை எங்களுக்கு தந்துள்ளது. அவர் நினைவாக ஊரில் கல்வெட்டு அல்லது தூண் வைக்க வேண்டும். எனக்கு ஏற்பட்ட இந்த இழப்பு போல் எந்த பெற்றோருக்கும் ஏற்படக்கூடாது.” என கண்ணீர் மல்க கூறியுள்ளார்.  

 தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்!

அடக்கொடுமையே.. 112 வயசுல 8 வது கல்யாணம்..... மணமகனை வலைவீசி தேடும் பாட்டி... !

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க!

From around the web