ஜேம்ஸ் பாண்ட் பட வில்லன் நடிகர் டெக்கி காரியோ காலமானார்.. பிரபலங்கள் இரங்கல்!
ஹாலிவுட் மற்றும் பிரெஞ்சு திரைப்பட உலகில் பிரபல நடிகராக விளங்கிய டெக்கி காரியோ (Tchéky Karyo) காலமானார். அவருக்கு வயது 71.
பிரான்சில் பிறந்த டெக்கி காரியோ, 1980களிலேயே திரை உலகில் அறிமுகமானார். 1995ஆம் ஆண்டு வெளியான ஜேம்ஸ் பாண்ட் திரைப்படமான கோல்டன் ஐ யில் வில்லனாக நடித்ததன் மூலம் உலகளவில் புகழ்பெற்றார். அதன்பின் பேட் பாய்ஸ், நோஸ்ட்ரடாமஸ், த பேட்ரியட் உள்ளிட்ட ஹாலிவுட் படங்களிலும், பிரெஞ்சு திரைப்படங்களான த மெசஞ்சர், கிஸ் ஆஃப் த டிராகன் உள்ளிட்ட பல படங்களிலும் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்தார்.

இவர் சமீபகாலமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்ததாகத் தெரிகிறது. சிகிச்சை பெற்று வந்த அவர் கடந்த அக்டோபர் 31ம் தேதி பிரான்சில் உள்ள தனது இல்லத்தில் மரணமடைந்தார். திரைத்துறையினர், ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் அவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
