அயோத்தி ராமர் கும்பாபிஷேகம்... புதுவையில் ஜன.22ம் தேதி முழு விடுமுறை அறிவிப்பு!

 
அயோத்தி


அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு புதுச்சேரியில் ஜனவரி 22ம் தேதி முழு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.அயோத்தியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ராமர் கோயிலில் வருகிற 22ம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. அன்றைய தினத்தில் ராமர் சிலை கோயிலின் உள்ளே, பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் ராமர் சிலை அமைக்கப்பட உள்ளது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்க நாடு முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கானோருக்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அயோத்தி
இந்நிகழ்ச்சியை ஒட்டி, நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு நிறுவனங்களுக்கு ஜனவரி 22ம் தேதி அரை நாள் விடுமுறை அளித்து மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. மேலும் வங்கிகளுக்கும் அரை நாள் விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுச்சேரியில் ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவையொட்டி வருகிற 22 ம் தேதி முழு அரசு விடுமுறை விடப்படுவதாக புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.


அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை பக்தர்கள் காண, காணொளி வாயிலாக புதுச்சேரி, காரைக்கால் கோயில்களில் ஏற்பாடு செய்ய இந்து அறநிலையத்துறைக்கு புதுச்சேரி அரசு அறிவுறுத்தி உள்ளது. அன்றைய தினம் மதியம் 12 மணி முதல் 2.30 மணி வரை புதுச்சேரி, காரைக்கால், மாவட்டங்களில் உள்ள கோயில்களில், உச்சி கால பூஜை நடை சாத்தப்பட்டு, பிரகாரம் மற்றும் உள் மண்டபங்களில் கும்பாபிஷேக நிகழ்ச்சியை பக்தர்கள் பார்க்க ஏற்பாடு செய்ய வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோயில் நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web