பீகாரில் ஜனசுராஜ் கட்சி தொண்டர் கொலை... ஐக்கிய ஜனதாதள வேட்பாளர் நள்ளிரவில் கைது!

 
பீகார் வேட்பாளர் கைது

பீகார் மாநில சட்டசபை தேர்தல் சூழலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், ஜனசுராஜ் கட்சியின் மூத்த தொண்டர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில், ஆளும் ஐக்கிய ஜனதாதள கட்சியின் வேட்பாளர் ஆனந்த் குமார் சிங் நள்ளிரவில் கைது செய்யப்பட்டார்.

243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டசபை தேர்தல் நவம்பர் 6 மற்றும் 11 ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. வாக்குகள் எண்ணிக்கை மற்றும் முடிவுகள் நவம்பர் 14 அன்று அறிவிக்கப்படவுள்ளன.

பீகார் நிதிஷ்குமார்

இந்த நிலையில், ஜனசுராஜ் கட்சி சார்பில் மொகமா தல் தொகுதிக்கான வேட்பாளராக பியூஷ் பிரியதர்ஷி அறிவிக்கப்பட்டுள்ளார். அவருக்காக பிரசாரம் செய்து வந்த துலார்சந்த் யாதவ் (75), முன்னாள் ராஷ்ட்ரீய ஜனதாதள தொண்டராகவும் உள்ளூர் தலைவராகவும் இருந்தார்.

இந்நிலையில், அரசியல் பிரச்சாரம் குறித்த மோதல் இரு குழுக்களிடையே வெடித்து, அதில் துலார்சந்த் யாதவ் தாக்கப்பட்டு கொல்லப்பட்டார். இந்த கொலைக்கான விசாரணையில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர்.

பீகார்

விசாரணை முடிவில், ஆளும் ஐக்கிய ஜனதாதள கட்சியின் வேட்பாளர் ஆனந்த் குமார் சிங் நேரடியாக சம்பவத்தில் தொடர்புடையவர் என தெரிய வந்ததால், அவர் நள்ளிரவில் கைது செய்யப்பட்டார். அவருடைய நெருங்கிய உதவியாளர்கள் மணிகாந்த் தாக்குர் மற்றும் ரஞ்சித் ராம் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுபற்றி பாட்னா மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு கார்த்திகேய சர்மா கூறுகையில், “இந்த சம்பவம் தொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சி.ஐ.டி. குழுவும் விசாரணை மேற்கொண்டு வருகிறது. அரசு நிர்வாகமும், போலீசாரும் இணைந்து முழுமையான விசாரணை நடத்தி வருகின்றனர்” என தெரிவித்தார். பீகார் தேர்தல் சூழலில் ஏற்பட்டுள்ள இந்த படுகொலை சம்பவம், மாநில அரசியல் சூட்டினை மேலும் அதிகரித்துள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?