காதலருடன் நடிகை நடிகை ஜான்வி கபூர் திருப்பதியில் சுவாமி தரிசனம்!

 
ஜான்வி கபூர்


பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மகளும், நடிகையுமான ஜான்வி கபூர் தனது 26வது பிறந்தநாளை நேற்று கொண்டாடிய நிலையில், காதலருடன் திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்துள்ளார். நடிகை ஜான்விகபூரும், அவரது காதலரும் திருமலை பிரகாரத்தில் வலம் வரும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


 


மும்பையில் வளர்ந்து இந்தி திரைப்படங்களில் நடித்து வந்தாலும், நடிகை ஜான்வி கபூரின் இஷ்ட தெய்வமாக திருமலை விளங்குகிறது. தனது செண்டிமெண்டான நாட்கள், ஆங்கில புத்தாண்டு, பிறந்தநாள், விசேஷ நாட்கள், புது பட ரிலீஸ் என ஒவ்வொரு நிகழ்ச்சியின் போதும், திருமலைக்கு வந்து தரிசனம் செய்வதை ஜான்வி பல வருடங்களாக வழக்கமாக வைத்திருக்கிறார். 

ஜான்வி கபூர்


இந்நிலையில், நேற்று தனது 26வது பிறந்தநாளையொட்டி, பிங்க் நிற பாவாடை தாவணியில், தோழிகள் மற்றும் காதலர் ஷிகர் பஹாரியாவுடன் சேர்ந்து திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்தார். முன்னதாக, ‘காஃபி வித் கரண்’ நிகழ்ச்சியில் ஷிகருடனான தனது காதலை நடிகை ஜான்வி கபூர் உறுதி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.திருப்பதி எப்போதுமே தனது செண்டிமெண்டான இடம் என்று சொல்லும் ஜான்வி, விரைவில் டோலிவுட்டில் ஜூனியர் என்.டி.ஆரின் ‘தேவரா’ படம் மூலமாக அறிமுகமாகிறார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web