ஜப்பான் முன்னாள் பிரதமர் டோமிச்சி முர்யமா காலமானார்!

 
ஜப்பான்

ஜப்பான் முன்னாள் பிரதமர் டோமிச்சி முர்யமா உடல்நலக்குறைவு காரணமாக அவருடைய சொந்த ஊரான ஒய்டா நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். பல நாட்கள் மருத்துவர்களின் கவனத்தில் இருந்த முர்யமா, இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 101.

ஜப்பான் சோஷியலிஸ்ட் கட்சியின் முன்னாள் தலைவரான முர்யமா, 1994-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 1996-ம் ஆண்டு ஜனவரி மாதம் வரை ஜப்பானின் பிரதமராக பதவி வகித்தார். அவர் பதவியில் இருந்த காலத்தில், ஜப்பானின் சர்வதேச வரலாற்றில் முக்கியமான நடவடிக்கைகளில் ஒன்றான மன்னிப்பு அறிக்கையை 1995-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ந்தேதி வெளியிட்டார்.

அந்த அறிக்கையில், இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பான் ராணுவம் நடத்திய போர்க்குற்றங்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்களுக்கு மன்னிப்பு கோரப்பட்டது. முர்யமாவைத் தொடர்ந்து ஜப்பான் பிரதமராக பதவி வகித்தவர்கள் அனைவரும் போர்க்குற்றங்களுக்கு மன்னிப்பு கோரினர். ஆனால் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே 2013-ம் ஆண்டுக்குப் பிறகு இதை நிறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?