அப்பாவானார் ஜஸ்பிரித் பும்ரா..!! குவியும் வாழ்த்துகள்!!

 
பும்ரா

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உட்பட   6 அணிகள் கலந்து கொள்ளும்  ஆசிய கோப்பை தொடர் இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடைபெற்று  வருகிறது. ஹைபிரிட் மாடலில் நடந்து வரும் ஆசியக் கோப்பை தொடருக்காக இந்திய அணி இலங்கையில் உள்ளது. உலகக்கோப்பை நெருங்குவதால், சீனியர் வீரர்கள் அனைவரும் ஆசியக் கோப்பை தொடரில் கலந்து கொண்டுள்ளனர்.  குறிப்பாக 10 மாதங்களுக்கு பின் இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் பும்ரா   ஒரு நாள் அணிக்கு திரும்பியுள்ளார்.



பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கிய 16 ரன்கள் எடுத்தார். இதன்பின் மழை பெய்ததால், ஆட்டம் பாதியிலேயே கைவிடப்பட்டது. இந்த நிலையில் நேபாளம் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி இன்று விளையாடவுள்ளது. இதற்கான இந்திய வீரர்கள் தயாராகி வந்த சூழலில், திடீரென நட்சத்திர வீரர் பும்ரா மும்பைக்கு விமானம் ஏறியுள்ளார்.
இதனால் மீண்டும் பும்ரா காயமடைந்தாரா என்ற ரசிகர்களிடையே கேள்வி எழுந்தது. இந்த நிலையில் பும்ரா மும்பை திரும்புவதற்காக காரணம் தெரிய வந்துள்ளது. இந்திய அணியின் பும்ரா தனது முதல் குழந்தை பிறப்புக்காக மனைவி மற்றும் குடும்பத்தினருடன் இருக்க மும்பை திரும்பி வருகிறார். தொலைக்காட்சி தொகுப்பாளர் சஞ்சனா கணேசன் - பும்ரா இருவருக்கும்   2021ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

பும்ரா

இதன்பின் இருவரும் நட்சத்திர தம்பதிகளாக வலம் வந்த நிலையில், கடந்த ஆண்டு இறுதியில் சஞ்சனா கணேசன் கர்ப்பமானதாக தகவல் வெளியாகியது. இதனிடையே காயமடைந்த பும்ரா, தனது மனைவியுடன் அதிக நேரம் செலவிட்டு வந்தார். தற்போது 2 ஆண்டுகளுக்குப் பிறகு ஜஸ்ப்ரித் பும்ரா மற்றும் சஞ்சனா கணேஷ் தம்பதியினருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இது குறித்து ஜஸ்ப்ரித் பும்ரா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்   எங்கள் சிறிய குடும்பம் வளர்ந்துள்ளது. எங்கள் இதயங்கள் நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு நிரம்பியுள்ளன.  இன்று காலை நாங்கள் எங்கள் மகன் அங்கத் ஜஸ்பிரித் பும்ராவை உலகிற்கு வரவேற்றோம். நாங்கள் நிலவுக்கு மேல் இருக்கிறோம், எங்கள் வாழ்க்கையின் இந்த புதிய அத்தியாயம் அனைத்திற்கும் காத்திருக்க முடியாது. ஜஸ்பிரித் மற்றும் சஞ்சனா எனக் குறிப்பிட்டுள்ளார். இவருக்கு சக வீரர்கள், ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web