25 மீட்டர் பள்ளத்தில் பாய்ந்த ஜீப்!! 8 பெண்கள் உட்பட 9 பேர் பலி.. 2 பேர் கவலைக்கிடம்!!

 
ஜீப் விபத்து

கேரள மாநிலம் வயநாட்டில்   தாளப்புழா கண்ணோட் மலைக்கு தொழிலாளிகளை ஜீப் ஏற்றி சென்றுள்ளது. இந்த ஜீப் கட்டுப்பாட்டை இழந்து 25 அடி பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது. இந்த கோர விபத்தில் 9 பேர்  பலியாகினர். இதில் 8 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  வயநாட்டில் ஜீப் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் மேலும் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.  ஓட்டுநர் உட்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர்.  தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற வாகனம் விபத்துக்குள்ளாகி   கீழே விழுந்ததில் வாகனம் இரண்டு துண்டுகளாக உடைந்தது.

 வேலை முடிந்து திரும்பும் வழியில் விபத்து நடந்தது குறித்து அறிந்த மற்ற தொழிலாளர்கள்  சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.    விபத்தில் உயிரிழந்த அனைவரும் வயநாடு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. 13 பயணிகளில் பெரும்பாலானோர் பெண்கள். மகிமா லா எண் 6 காலனியில் வசித்து வரும்  ராணி, சாந்தா, சின்னம்மா, லீலா, ஷாஜா, ரபியா, ஷோபனா, மரியக்கா மற்றும் வசந்தா இவர்கள் அனைவரும் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.மற்றவர்களின் விவரங்கள் இன்னும் அறியப்படவில்லை.  படுகாயம் அடைந்தவர்கள்   வயநாடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.   தோட்டத் தொழிலாளர்கள் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தபோது விபத்து நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 தீபு டீ டிரேடிங் கம்பெனிக்கு சொந்தமான இந்த  ஜீப் கண்ணமலா கொண்டை ஊசி வளைவு சாலையில் சென்றுகொண்டிருந்தபோது  பாறைகள் நிறைந்த பள்ளத்தாக்கில் விழுந்தது. விபத்து நடந்த இந்தப் பகுதி மோசமான விபத்துக்கள் அதிகம் நடக்கும் ஆபத்தான பகுதி   என்பது குறிப்பிடத்தக்கது.உயிரிழந்த பெண்களில் பெரும்பாலானோர் தமிழகத்தைச் சேர்ந்த தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் என அதிர்ச்சி தரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.  இந்த விபத்து குறித்து மானந்தவாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தோட்ட வேலைக்குச் சென்ற பெண்கள் வேலை முடிந்து வீடு திரும்பும் வழியில் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும்,  பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

ஜீப் விபத்து

இச்சம்பவம் குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவரும் வயநாடு நாடாளுமன்றத் தொகுதியின் எம்.பி.யுமான ராகுல் காந்தி  “  "வயநாட்டின் மானந்தவாடியில் பல தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் உயிரைப் பறித்த சோகமான ஜீப் விபத்துக்கு ஆழ்ந்த வருத்தம் அளிக்கிறது" என பதிவிட்டுள்ளார்.  இந்த கோர விபத்து குறித்து மாவட்ட அதிகாரிகளிடம் பேசி, விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.  என் எண்ணங்கள் துயரப்படும் குடும்பங்களுடன் உள்ளன. படுகாயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்" என தெரிவித்துள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web