கண்ணீர் விட்டு கதறியழுத ஜெமிமா.. தோனி சாதிக்காத சாதனை... நெகிழ்ச்சி வீடியோ!

 
ஜெமிமா இந்திய மகளிர் கிரிக்கெட்

மகளிர் உலகக் கோப்பை அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, 2015-ம் ஆண்டு ஆண்கள் அணி சந்தித்த தோல்விக்கு பழிதீர்த்தது இந்திய மகளிர் அணி.

முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 49.5 ஓவர்களில் 338 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய இந்திய அணி, ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஆடிய அசத்தல் சதத்தின் பேரில் 48.3 ஓவர்களில் இலக்கை எட்டியது.

இந்த வெற்றி, 2015 உலகக்கோப்பையில் எம்.எஸ். தோனி தலைமையிலான இந்திய ஆண்கள் அணி ஆஸ்திரேலியாவிடம் அரையிறுதியில் அடைந்த தோல்விக்கு சரியான பதிலாக அமைந்தது. அப்போது தோனி கடைசிவரை போராடியும் வெற்றியைப் பெற்றுத் தர முடியவில்லை. இன்று, அதே எதிரணிக்கு எதிராக ஜெமிமா தனது சதத்தால் இந்தியாவை வெற்றிக்கு கொண்டு வந்துள்ளார்.

ஆட்டநாயகி விருதை பெற்ற பிறகு ஜெமிமா உணர்ச்சி வசப்பட்டு கண்ணீர் வடித்தார். “முதலில், இயேசுவுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். இன்று நான் தனியாக விளையாடவில்லை; கடவுள் என்னைத் தாங்கிச் சென்றார். கடந்த நான்கு மாதங்கள் மிகவும் கடினமாக இருந்தது, ஆனால் இன்று இந்தியா வென்றது என்பதே எனக்கு பெருமை” என்றார்.

ஜெமிமா இந்திய மகளிர் கிரிக்கெட்

மேலும் அவர், “கடந்த ஆண்டு உலகக் கோப்பையிலிருந்து நீக்கப்பட்டதன் வலி இன்னும் மனதில் இருந்தது. இந்த முறை முயற்சிப்பேன் என்று தீர்மானித்தேன். இந்த பயணத்தின் போது ஒவ்வொரு நாளும் அழுதேன். ஆனால் கடவுள் அனைத்தையும் கவனித்தார். ‘அசையாமல் நில், கடவுள் உனக்காகப் போராடுவார்’ என்ற பைபிள் வசனமே எனக்குத் தைரியம் தந்தது,” என்று கூறினார்.

இறுதியாக, “நவி மும்பை ரசிகர்கள் எனக்கு அளித்த உற்சாகம் மறக்க முடியாதது. அவர்கள் குரல் எனக்கு சக்தியாக இருந்தது,” எனக் கூறி ஜெமிமா தனது உரையை முடித்தார். இந்திய மகளிர் அணி இப்போது உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?