240 கிராம் தங்கம், லட்சக்கணக்கில் பணம் திருட்டு... நகைக்கடை உரிமையாளர் கைது!
240 கிராம் தங்கம் மற்றும் ஒன்றரை லட்சம் ரூபாய் பணத்தையும் திருடிக் கொண்டு தப்பியோடிய நபரை, 18 ஆண்டுகளுக்கு பின், மும்பையில் சிறப்பு புலனாய்வு குழுவினர் கைது செய்தனர். போலீசார் விசாரணையில் மும்பை முலுண்ட் ஜார்ஜியன் லிங்க் ரோட்டில் வசிக்கும் மஹிந்திரா ஹஷ்பா யாதவ் (53) என்பவர் கைது செய்யப்பட்டார். இவர் கேரளத்தில் மூவாற்றுப்புழாவில் நகைக்கடை ஒன்றை வைத்து நடத்தி வந்தார். 240 கிராம் தங்கத்தின் தூய்மையை அதிகப்படுத்துவதாக வாடிக்கையாளரை நம்ப வைத்து முதலில் மோசடி செய்துள்ளார்.

பின்னர், தனது நண்பரிடம் ஒன்றரை லட்சம் ரூபாய் கடன் வாங்கி உள்ளார். அதன் பின்னர், வாடகைக் கட்டிடத்தில் நடத்தி வந்த தனது நகைக் கடையை அப்படியே போட்டு விட்டு, தனது குடும்பத்துடன் மூவாட்டுபுழாவை விட்டு வெளியேறினார். அவரைத் தேடி மும்பையின் சாங்லி மாவட்டத்தில் உள்ள பல்வானில் உள்ள அவரது வீட்டிற்கு போலீசார் சென்றுள்ளனர். ஆனால் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.மூவாட்டுபுழா டிஒய்எஸ்பி பி.எம்.பைஜூ, இன்ஸ்பெக்டர் பாசில் தாமஸ், சப்-இன்ஸ்பெக்டர்கள் மாஹின் சலீம், விஷ்ணு ராஜு, கே.கே.ராஜேஷ், பி.கே.வினாஸ், பி.சி.ஜெயக்குமார் மற்றும் மூத்த சிவில் போலீஸ் அதிகாரிகள் கே.ஏ.அனாஸ், பிபில் மோகன் ஆகியோர் கைது செய்தனர்.

தொழிலாளி முதல் நகை உரிமையாளர் வரை இந்த வழக்கின் விசாரணை மாவட்ட காவல்துறை தலைவர் வைபவ் சக்சேனாவின் மேற்பார்வையில் மீண்டும் செயல்படுத்தப்பட்டது. தீவிர விசாரணையில், அவர் மும்பையின் பணக்கார பகுதியில் தற்போது நகைக்கடை வைத்து நடத்தி வருவது தெரியவந்தது. பின்னர், போலீசார் அதிரடி நடவடிக்கை மூலம் காலை வீட்டை சுற்றி வளைத்து கைது செய்தனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
