முதலாளி வீட்டின் பூட்டை உடைத்து பல கோடி மதிப்பிலான நகை, பணம் கொள்ளை. கார் டிரைவர் கைவரிசை.!

 
பிரஜேஷ்குமார்

சென்னை, ஈஞ்சம்பாக்கம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஆலிவ் கடற்கரை சாலையில் வசித்து வருபவர் தொழிலதிபர் பிரஜேஷ்குமார். படப்பையில் கடந்த 20 ஆண்டுகளாக ஏற்றுமதி தொழில் செய்து வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக  அந்த வீட்டில் குடும்பத்துடன் வாடகைக்கு வசித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த 23ம் தேதி குடும்பத்துடன் ஜெர்மனி சென்றார். வீட்டில் காவலாளியும் சமையல்காரரும் மட்டுமே இருந்தனர். கடந்த 30ம் தேதி காலை 7 மணியளவில் வாட்ச்மேன் விளக்கை அணைக்க வீட்டின் பின்புறம் சென்றார். வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், வீட்டின் உள்ளே சென்று பார்த்தார்.

கொள்ளை சம்பவம் நடந்த இடம்

அப்போது முதல் தளத்தில் உள்ள படுக்கையறையின் கதவு உடைக்கப்பட்டு அங்கிருந்த பணப்பெட்டி மற்றும் லாக்கரை யாரோ உடைத்து அங்கிருந்த பணம் முழுவதையும் கொள்ளையடித்துச் சென்றது தெரிந்தது. இதேபோல், மற்றொரு லாக்கரை உடைத்து, அதிலிருந்த நகைகளும் திருடப்பட்டுள்ளன. வாட்ச்மேன் கொடுத்த தகவலின் பேரில், அங்கு வந்த நீலாங்கரை காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.

சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகை பதிவு செய்யப்பட்டது. பல கோடி ரூபாய் மதிப்புள்ள பல லட்சம் ரூபாய், தங்கம், வைரம், வெள்ளி ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.இதையடுத்து போலீசார் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அப்போது 4 பேர் வந்து சென்றது தெரியவந்தது. இந்நிலையில் பெங்களூருவில் உள்ள ஓட்டலில் தங்கியிருந்த 4 பேரை கைது செய்த போலீசார் ரூ.17 லட்சம் ரொக்கம் மற்றும் ரூ.3 கோடி மதிப்புள்ள தங்கம், வைரம், வெள்ளி நகைகளை பறிமுதல் செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.

Police station

விசாரணையில் தொழிலதிபர் வீட்டில் தற்காலிக டிரைவராக பணியாற்றி வந்த பிரகாஷ் என்பவர் வீட்டில் நகை பணம் இருப்பதை அறிந்து நேபாளத்தை சேர்ந்த நபர்களை வரவழைத்து உரிமையாளர் இல்லாத நேரத்தில் கொள்ளையை அரங்கேற்றியது தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் நேபாளத்தைச் சேர்ந்த லலித், ஜோசி, பிரகாஷ், சவுடு என்பது தெரியவந்தது. மேலும் நகைகள் மற்றும் பணத்துடன் மேலும் இருவர் தலைமறைவாக உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web